மதுரை வைகையற்றுப்பகுதியில் இளம்பெண் உடல் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண்ணுடன் பணிபுரிந்த கொத்தனார் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரை பிடித்து செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டம் மேல சக்குடி பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த ரவிசங்கர் (31). இவர் கடந்த 22 ஆம் தேதியன்று தனது மனைவி வைஜெயந்தி (28) என்பவர் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை எனக்கூறி மதுரை சிலைமான் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர். இந்நிலையில் மதுரை விரகனூர் அருகே வைகையாற்று பகுதியில் எரிந்த நிலையில் 28 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் கிடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சிலைமான் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்ணின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.
கோவை: டிப்பர் லாரி மோதி ஆசிரியை பலி (apcnewstamil.com)
இதனையடுத்து வைஜெயந்தின் உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
உயிரிழந்த வைஜெயந்தியிடன் பணிபுரிந்துவந்த கொத்தனாரான சிவகங்கை மாவட்டம் பிஷர்பட்டணம் பகுதியைச் சேர்ந்த கருப்பையா மற்றும் அவரது நண்பர் மதுரை சின்ன உடைப்பு பகுதியைச் சேர்ந்த ஜெயகாந்தன் ஆகிய இருவரையும் சிலைமான் காவல்நிலைய காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன் விரோதம் காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.