spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்செல்போனை பறித்ததால் வாலிபர் தற்கொலை முயற்சி

செல்போனை பறித்ததால் வாலிபர் தற்கொலை முயற்சி

-

- Advertisement -

நண்பன் செல்போனை பறித்ததால் போதையில் கழுத்தை அறுத்துக் கொண்டு வாலிபர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

 

we-r-hiring

செல்போனை பறித்ததால் வாலிபர் தற்கொலை முயற்சி

சென்னை மதுரவாயல் ஏரிக்கரை கன்னியம்மன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் டெல்லி பாபு (28) கூலி வேலை செய்து வருகிறார். இவரும் இவரது நண்பர் ஒருவரும் கடந்து இரண்டு நாட்களுக்கு முன் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக்கில் மது வாங்கி குடித்துள்ளனர். அப்போது டெல்லி பாபுவின் நண்பர் அவரது செல்போனை பறித்துக் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.

செல்போனை பறித்ததால் வாலிபர் தற்கொலை முயற்சி

இது குறித்து டெல்லி பாபு நண்பரிடம் கேட்டும் அவர் செல்போனை தர மறுத்துள்ளார். இதனால் விரக்தியுடன் போதையில் டெல்லி பாபு கத்தியால் தனது கழுத்தை தானே அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.  இதில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்தவரை அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

செல்போனை பறித்ததால் வாலிபர் தற்கொலை முயற்சி

 

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுரவாயல் போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். போதையில் வாலிபர் தனக்குத்தானே கழுத்தறுத்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செல்போனை பறித்ததால் வாலிபர் தற்கொலை முயற்சி

மேலும் மதுரவாயல், வளசரவாக்கம், போரூர் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் கஞ்சா பழக்கம் அதிகரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.  போலீசார் உரிய  நடவடிக்கை எடுத்து கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

MUST READ