spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்மணலியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் மகன் கொலை – போலீசார் விசாரணை

மணலியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் மகன் கொலை – போலீசார் விசாரணை

-

- Advertisement -

மணலி புதுநகர் அருகே அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் மகன் தலையில் அடித்து கொலை. நண்பர்களுடன் மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் சரித்திர பதிவேடு குற்றவாளி கொலை என போலீஸ் தகவல். இருவரை கைது செய்து தீவிர விசாரணை.

திருவள்ளூர் மாவட்டம் மணலி புதுநகர் அடுத்த வெள்ளிவாயல் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் சதா. அதிமுக பிரமுகரான சதாவின் ஊராட்சி மன்ற தலைவர் பதவி காலம் அண்மையில் முடிவடைந்தது. இவரது முதல் மனைவியின் மகன் விக்கி என்கிற ராயப்பன் (29) மணலி புதுநகர் காவல் நிலைய சி கேட்டகிரி சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருந்து வந்துள்ளார். இவர் மீது கொலை முயற்சி உட்பட 11 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

we-r-hiring

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் சங்கீதா என்ற பெண்ணை காதலித்த விக்கி அவரை காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார். இவரது காதல் திருமணத்தை ஊராட்சி மன்ற தலைவராக இருந்த சதா ஏற்கவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக விக்கி தனது மாமனார் வீட்டிலேயே வீட்டோடு மருமகனாக இருந்து வந்துள்ளார். காதல் திருமணம் செய்து கொண்ட விக்கிக்கு 3வயது ஆண் மகனும் 9மாத பெண் குழந்தையும் உள்ளனர். விக்கி சரிவர வேலைக்கும் செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது.

மணலியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் மகன் கொலை – போலீசார் விசாரணைநேற்று பிற்பகலில் தனது வாகனத்திற்கு டயர் மாற்ற வேண்டும் எனக் கூறி தமது மனைவியிடம் ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு விக்கி வெளியே சென்றுள்ளார். நேற்று இரவு விக்கி வீடு திரும்பாத நிலையில் பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளனர். இந்த நிலையில் நாப்பபாளையம் பகுதியில் தனியார் தொழிற்சாலை பின்புறம் உள்ள முட்புதரில் இன்று காலையில் இயற்கை உபாதை கழிக்க சென்ற பொதுமக்கள் சிலர் ஆண் ஒருவர் ரத்த காயங்களுடன் கிடப்பதைக் கண்டு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இந்தத் தகவலின் பேரில் மணலி புதுநகர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் மகனான சரித்திர பதிவேடு குற்றவாளி விக்கி தலையில் அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. நேற்று இரவு சம்பவ இடத்தில் கூட்டாக சேர்ந்து மது அருந்தியதும், சீட்டு கட்டுகளைக் கொண்டு சூதாடியதையும் காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர். தொடர்ந்து கொலை செய்யப்பட்ட விக்கியின் சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர் உடற்கூறு ஆய்விற்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மணலி புதுநகர் கொலை வழக்கு பதிவு செய்து ஆய்வாளர் பாஸ்கர் தலைமையில் தனிப்படை அமைத்து அப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் விக்கியுடன் மது அருந்திய நண்பர்கள் இருவரை கைது செய்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களுடன் மது அருந்திய மேலும் இருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். நண்பர்கள் மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் மட்டுமே கொலை நடந்ததா அல்லது திட்டமிட்டு விக்கியை வரவழைத்து மது ஊற்றி கொடுத்து கொலை அரங்கேற்றப்பட்டதா என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர புலனாய்வு நடத்தி வருகின்றனர்.

சி கேட்டகிரி சரித்திர பதிவேடு குற்றவாளியான விக்கி மீது வேறு யாருக்கேனும் முன்விரோதம் இருந்து அதன் காரணமாக இந்த கொலை நடந்ததா எனவும் விசாரித்து வருகின்றனர். அண்மையில் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் சதா தனது ஊராட்சியில் வாக்காளர்களை கவரும் வகையில் இறால், மீன், நண்டு வறுவலுடன் 50 ஆடுகளை வெட்டி பிரியாணி விருந்து வைத்த நிலையில் ஊராட்சி மன்ற தலைவருடன் ஏற்பட்ட முன்பகை காரணமாக இந்த கொலை நடத்தப்பட்டதா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ