spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம் 17 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தைக் கூறி பாலியல் வன்கொடுமை செய்த பிரவீன்குமார்

 17 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தைக் கூறி பாலியல் வன்கொடுமை செய்த பிரவீன்குமார்

-

- Advertisement -

 17 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தைக் கூறி பாலியல் வன்கொடுமை செய்த பிரவீன்குமார்

தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரது மகன் பிரவீன்குமார் (வயது 23).  இவர் கடந்த 2021 ஆம் ஆண்டில் பொறியியல் பட்டப்படிப்பு படித்தபோது  பதினேழு வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். அப்போது அந்த சிறுமிக்கு ஆசைவார்த்தைக் கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

17 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தைக் கூறி பாலியல் வன்கொடுமை செய்த பிரவீன்குமார்
நீதிமன்றம்

இதில், அந்த சிறுமி கர்ப்பமடைந்துள்ளதாகவும்,  இதையடுத்து அந்த சிறுமிக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.  இந்தப் புகாரின் பேரில் கும்பகோணம் அனைத்து மகளிர் போலீசார்  வழக்குப்பதிவு செய்து பிரவீன்குமாரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு தஞ்சாவூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்துள்ளது.

we-r-hiring

இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி ஜி.சுந்தர்ராஜன்,  பிரவீன் குமாருக்கு இருபத்தைந்து ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்குமாறு தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தார்.

 

MUST READ