spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்ரியல் புஷ்பா கைது! அதிர்ச்சியில் அரசியல் பிரமுகர்கள்!

ரியல் புஷ்பா கைது! அதிர்ச்சியில் அரசியல் பிரமுகர்கள்!

-

- Advertisement -

பாஜக ஓ பி சி அணி மாநில நிர்வாகியும் மிரட்டல் கட்டப் பஞ்சாயத்து செம்மர கடத்தல், என 50-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய, ரியல் புஷ்பா என்று அழைக்கப்படும் பிரபல ரவுடி மிளகாய் பொடி வெங்கடேசன் சென்னை செங்குன்றத்தில் கைது செய்யப்பட்டுள்ளாா். இது பாஜகவிலும், ரவுடிகள் வட்டாரத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ரியல் புஷ்பா கைது! அதிர்ச்சியில் அரசியல் பிரமுகா்கள்!மிளகாய்பொடி வெங்கடேசன் (49) செம்மரக்கட்டை கடத்தல் மூலம் பல ஆயிரம் கோடி வரை சம்பாதித்துள்ளாா். இவரது தந்தை பர்மாவில் வசித்து வந்தார். தாய் மற்றும் தந்தையுடன் சென்னைக்கு வந்த இவா் ஆரம்பத்தில் சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் வெங்கடேசன் மற்றும் அவரது பெற்றோர் தவித்துள்ள நிலையில், ரெட்ஹில்ஸ் பகுதியில் 13 ரூபாய் வாடகைக்கு வீடு எடுத்து படுக்க பாய் கூட இல்லாமல் வாழ்ந்து வந்துள்ளனா். இவரது தாயுடன் சோ்ந்து மிளகாய் பொடி வியாபாரம் செய்து வாழ்க்கை நடத்தி வந்துள்ளனா். இதுவே இவருக்கு அடைமொழியாக மாற காரணமாக அமைந்தது. 1994-ல் தொழிலாளியாக சவுதிக்கு சென்று, அங்கு ஆடு மற்றும் ஒட்டகம் மேய்க்கும் பணியில் 3 மாதமாக ஈடுபட்டுள்ளாா்.ரியல் புஷ்பா கைது! அதிர்ச்சியில் அரசியல் பிரமுகா்கள்!அப்போது, வெங்கடேசனின் தாய் சென்னையில் உயிரிழந்த தகவல் இவருக்கு தாமதமாகவே கிடைத்தது. பின்னர் சென்னைக்கு திரும்பிய இவருக்கு அந்த பகுதியைச் சேர்ந்த பர்மா காலனி நண்பர்களுடன் பழக்கம் ஏற்பட்டது. சென்னையில் ஆரம்பத்தில் ஒரு சில அடிதடி வழக்குகளில் சம்பந்தப்பட்டு, திடீரென ஒரு நாள் பெரிய ஆளாக வளர்ந்து நின்றார். அதற்கு காரணம், பர்மாவில் இருந்து வந்து, அங்கு உள்ள செம்மரக்கட்டை கடத்தல் ஆசாமிகளுடன் தொடர்பில் இருப்பது தான். பின்னர் மணிப்பூரில் இருந்து 100 பேரை வரவழைத்து ஆந்திராவில் திருப்பதி பகுதியில் செம்மரக்கட்டைகளை வெட்டி, வெளிநாடுகளுக்கு கடத்தி வந்துள்ளாா். அதன் மூலமாக பல கோடி ரூபாய் பணம் வருமானம் கிடைத்துள்ளது.ரியல் புஷ்பா கைது! அதிர்ச்சியில் அரசியல் பிரமுகா்கள்!பிரபல கடத்தல் ஆசாமிகள் கெங்குரெட்டி, சாகுல் ஹமீது ஆகியோருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இதனால் செம்மரக்கட்டை கடத்தலில் கொடி கட்டிப் பறந்தார். ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு முதல்வராக பதிவேற்றதும், செம்மரக்கட்டை கடத்தல் ஆசாமிகள் கைது செய்யப்பட்டு, பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்ட கடத்தல் வழக்கில் ஈடுபட்ட வெங்கடேசன் 2015-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா போல தனது குளியல் அறையில் தங்கம் பதித்து, வீட்டுக்குள் தியேட்டர், நீச்சல் குளம், பார் என அனைத்து வசதிகளுடன் ஆடம்பரமாக 4 மாடி கொண்ட பங்களாவை கட்டினாா். அதிமுக, பாஜ கட்சிக்காக பணத்தை வாரி இறைத்தார். இதனால் ஆரம்பத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தியுடன் பழக்கம் ஏற்பட்டது.ரியல் புஷ்பா கைது! அதிர்ச்சியில் அரசியல் பிரமுகா்கள்!ஆரம்பத்தில் அதிமுகவில் ஒன்றிய இளைஞர் அணி செயலாளராக இருந்தவர், பின்னர் திருவள்ளூர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணியின் இணை செயலாளர் பதவி கிடைத்தது. பின்னர் பாஜகவில் இணைந்தார். இதற்காக கொடுக்க வேண்டியவர்களுக்கு சுமார் ரூ.50 லட்சத்தைக் கொடுத்துள்ளார்.

we-r-hiring

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், பா ஜ க உள்துறை அமைச்சா் அமத் ஷா உள்பட பல்வேறு தலைவர்கள் வெங்கடேசன் வீட்டுக்கு வந்து விருந்து சாப்பிட்டு விட்டுச் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.ரியல் புஷ்பா கைது! அதிர்ச்சியில் அரசியல் பிரமுகா்கள்!கட்சிக்காக பணத்தை செலவு செய்து வந்த இவரை ஆந்திர மக்கள் ரியல் புஷ்பா என்று அழைத்து வருகின்றனா். இவரது வாழ்க்கையைத்தான் அல்லு அர்ஜூன் நடித்து புஷ்பா என்று படம் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டு வருகிறது. இப்போது இந்த ரியல் புஷ்பா, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது பாஜகவிலும், ரவுடிகள் வட்டாரத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெட்ரோ ரயில் பாலம் இடிந்து விழுந்து விபத்து! விபத்தில் சிக்கியவர்கள் யார் யார்?

MUST READ