Homeசெய்திகள்க்ரைம்மகள் விபச்சாரத்தில் சிக்கியதாக போன் கால்... அதிர்ச்சியில் மாரடைப்பால் சரிந்து விழுந்த தாய் - உயிர்...

மகள் விபச்சாரத்தில் சிக்கியதாக போன் கால்… அதிர்ச்சியில் மாரடைப்பால் சரிந்து விழுந்த தாய் – உயிர் பலி

-

- Advertisement -

மகள் விபச்சாரத்தில் சிக்கியதாக போன் கால்.. அதிர்ச்சியில் மாரடைப்பால் சரிந்து விழுந்த தாய் - உயிர் பலி

செல்போனில் போலி அழைப்புகளால் நடக்கும் ஏமாற்று வேலைகள் நாளுக்கு நாள் மிகுந்த வண்ணம் உள்ளன. இதன் உச்சமாக போலி அழைப்பினால் அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆக்ராவில் (உத்தரப் பிரதேசம்) உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் பணியாற்றி வந்தவர் மால்தி வர்மா -Malti Verma (58). இவருக்கு இரண்டு மகள்கள். ஒரு மகள் கல்லூரியில் படித்து வருகிறார் மற்றொரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை அன்று பள்ளியில் வேலை செய்துகொண்டிருந்த மால்தியின் மொபைல் எண்ணுக்கு வாட்சப் கால் ஒன்று வந்துள்ளது. அந்த அழைப்பை செய்தவரின் ப்ரொபைல் டிஸ்பிலேவில் போலீஸ் உடையணிந்த ஒருவரின் படம் இருந்துள்ளது.

புதிய செயலி மூலம் 500 கோடி ரூபாய் மோசடி செய்த நபர் கைது

போனை எடுத்து மால்திவர்மா பேசிய போது மறுபுறம் இருந்து பேசிய நபர், ‘உங்களின் மகள் விபச்சாரத்தில் ஈடுபட்டபோது போலீசில் பிடிபட்டுள்ளார். நான் கூறும் வங்கிக்கணக்கில் 1 லட்சம் ருபாய் டெபாசிட் செய்தால் உங்கள் மகள் மீது எந்த வழக்கும் இல்லாமல் பார்த்துக்கொள்கிறோம். பணம் அனுப்பிய பின்னர் அவர் பத்திரமாக வீடு வந்து சேர்வார் என்று கூறியுள்ளார். இதைக் கேட்டு பதற்றமடைந்த மால்தி தனது மற்றொரு மகளுக்கு போன் செய்து விஷயத்தை சொல்லி வாட்சப் கால் வந்த நம்பரை மகளிடம் சொல்லியுள்ளார்.

அந்த நம்பர் +92 என்று தொடங்கியதால் அது போலி அழைப்பு என்று மகள் தாய் மால்தியை ஆறுதல் படுத்தியுள்ளார். மேலும் காலேஜில் இருந்த சகோதரிக்கும் போன் செய்து அவர் பத்திரமாக இருப்பதை உறுதிப்படுத்தி தாய்க்கு ஆறுதல் அளித்துள்ளார்.

ஆனாலும் பதற்றத்துடனேயே இருந்த மால்தி வீடு திரும்பியதும் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். போலி அழைப்பு தொடர்பாக மால்தியின் குடும்பம் புகார் அளித்ததை அடுத்து போலீசார் அதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ