spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்ரூ.20 லட்சம் லஞ்சம்:கையும் களவுமாக சிக்கிய அமலாக்கத்துறை உதவி இயக்குநர்

ரூ.20 லட்சம் லஞ்சம்:கையும் களவுமாக சிக்கிய அமலாக்கத்துறை உதவி இயக்குநர்

-

- Advertisement -

 

ரூ.20 லட்சம் லஞ்சம்:கையும் களவுமாக சிக்கிய அமலாக்கத்துறை உதவி இயக்குநர்லஞ்சம் பெற்ற வழக்கில் டில்லியில் அமலாக்கத்துறை உதவி இயக்குநர் சந்தீப் சிங் யாதவை சிபிஐ கைது செய்தனர்.

we-r-hiring

கடந்த ஆக.,3, 4 ஆகிய தேதிகளில்  மும்பையில் உள்ள பிரபல நகைக்கடையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அமலாக்கத்துறை உதவி இயக்குநர் சந்தீப் சிங் யாதவ், நகைக்கடை வியாபாரியிடம் ரூ.25 லட்சம் லஞ்சம் கேட்டு உள்ளார். பணம் தரவில்லை என்றால் கைது செய்யப்படுவர் என மிரட்டி உள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ரவுடி நாகேந்திரனிடம் விசாரணை

சந்தீப் சிங் யாதவ் கேட்ட தொகையை நகைக்கடை வியாபாரியால் தர இயலாததால் ரூ.20 லட்சம் தருமாறு பேரம் பேசியு இருக்கிறார். ரூ.20 லட்சம் லஞ்ச பணத்தை சந்தீப் சிங் யாதவ் பெற்ற போது சிபிஐ அதிகாரிகளால் கையும் களவுமாக பிடிபட்டுள்ளார். அவரை கைது செய்த சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ