வளசரவாக்கத்தில் வேலை தேடி வரும் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய பெண் கைது செய்யப்பட்டார்.
சென்னை வளசரவாக்கம், காரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பாலியல் தொழில் நடத்தப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வளசரவாக்கம் காவல் ஆய்வாளர் தலைமையிலான குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ராஜேஸ்வரி நகர் 2வது தெருவில் உள்ள ஒரு வீட்டை கண்காணித்தபோது, அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் சிலர் வந்து செல்வதும், பெண்கள் இருப்பதும் தெரியவந்தது.
இதனால் அங்கு சென்று சோதனை நடத்திய பெண் போலீஸார், பாலியல் தொழில் நடைபெறுவதை உறுதி செய்தனர். இதைத்தொடர்ந்து பெண்களை பாலியல் தொழில் ஈடுபடுத்தி கஸ்தூரி (53) என்ற பெண்ணை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன் அந்த இடத்தில் இருந்து 3 பெண்கள் மீட்கப்பட்டனர்.
சென்னைக்கு வேலை தேடி வரும் இளம் பெண்களிடம் வேலை வாங்கித்தருவதாக அழைத்துச் சென்று, கட்டாயப்படுத்தி அவர்களை பாலியல் தொழில் கஸ்தூரி ஈடுபடுத்தியது விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட கஸ்தூரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். மீட்கப்பட்ட 3 பெண்களும் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.