லக்னோவில் சார்பாக் ஹோட்டலில் தாய்க்கும் 4 சகோதரிகளுக்கும் கட்டாயப்படுத்தி மதுவை ஊற்றி அவர்கள் வாயில் துணியை அடைத்து மணிக்கட்டுகளை வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ளார் அந்த தாயாரின் மகன்.
அவர்கள் வசித்த பகுதிகளைச் சேர்ந்த அக்கம்பக்கத்தினர் அப்பகுதியைச் சேர்ந்த சிலர், ‘‘நீண்ட நாட்களாக தாய், சகோதரிகளை அந்த இளைஞன் துன்புறுத்தி வந்தான்’ எனக் கூறுகின்றனர். இந்நிலையில், டிசம்பர் 30 ஆம் தேதி, அந்த இளைஞன் தனது தந்தை, தாய், சகோதரிகள் நால்வருடன் லக்னோவிற்கு வந்து, சார்பாக்கில் உள்ள ஹோட்டல் ஷரன்ஜீத்தில் தங்கினார்.

செவ்வாய்க்கிழமை இரவு தாய், 4 சகோதரிகளுக்கு கட்டாயப்படுத்தி மது அருந்த வைத்துள்ளான். பின்னர், அவர்களது வாயில் துணியை வைத்து அடைத்து, கழுத்தை தாவணியால் இறுக்கியுள்ளான். சிலரது மணிக்கட்டை கத்தியால் வெட்டியுள்ளான். அப்பாவும் இதற்கு உதவி செய்துள்ளார். அனைவரையும் கொன்றுவிட்டு, தனது தந்தையை ரயில் நிலையத்தில் விட்டுவிட்டு காவல் நிலையம் சென்றுள்ளான்.
தாய்,4 சகோதரிகளை கொன்ற பிறகு, தந்தை ரயிலில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளச் சென்றதாகவும், நானும் தற்கொலை செய்யப் போனதாகவும், ஆனால் தைரியம் வர முடியாமல் போனதால் காவல்துறையிடம் சென்றேன் என அர்ஷத் தெரிவித்தான்.
குற்றம் சாட்டப்பட்ட அர்ஷத்தின் வாக்குமூலம் அடிப்படையில், சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட கத்திகள், கழுத்தை நெரிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட தாவணி ஆகியவை மீட்கப்பட்டுள்ளதாக டிசிபி மத்திய ரவீனா தியாகி தெரிவித்தார்.
இதுகுறித்து காவல்துறையினர், ‘‘தனது தந்தையை சார்பாக் ரயில் நிலையம் அருகே இறக்கிவிட்டு, குற்றம் சாட்டப்பட்டவன் காலை ஏழு மணியளவில் லோகோ காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளான். தாயும் நான்கு சகோதரிகளும் கொல்லப்பட்டதாகவும், அவர்களது உடல்கள் ஹோட்டல் அறையில் கிடப்பதாகவும் காவல்துறை அதிகாரியிடம் கூறினான். போலீஸ்காரர் நம்பாததால், தன் பேண்ட்டில் இருந்த ரத்தக் கறையை காட்டியுள்ளான்.
இதைத்தொடர்ந்து, தகவல் கிடைத்ததும், நாகா கோட்வாலி ஹோட்டலுக்கு வந்து, விஷயம் உறுதி செய்யப்பட்டதும், அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறிது நேரத்தில், அனைத்து அதிகாரிகளும் அந்த இடத்தை அடைந்தனர். சிறிது நேரத்தில் சார்பாக் ரேவதி தெரு ஒரு கன்டோன்மெண்டாக மாற்றப்பட்டது.
‘‘என் அம்மாவுக்கும், தங்கைகளுக்கும் சந்தேகம் வராமல் இருக்க, அவர்களை முதலில் அஜ்மீருக்கு அழைத்துச் சென்றேன். அஜ்மீர் ஷெரீப் தர்காவில் வழிபாடு செய்த பிறகு, புத்தாண்டைக் கொண்டாடுவதாக கூறி அனைவரையும் லக்னோவுக்கு அழைத்து வந்தேன். விடுதியில் தங்கிவிட்டு செவ்வாய்க்கிழமை மாலை சாப்பாடு கொண்டு வந்து அனைவருடனும் சாப்பிட்டோம். கொலையின் போது எதிர்ப்பை தவிர்க்க மதுவை கட்டாயப்படுத்தி வாயில் ஊற்றினேன். பின்னர் அனைவரையும் நள்ளிரவில் படுகொலை செய்தேன்’’ என அர்ஷத் தெரிவித்துள்ளான்.
பிரேத பரிசோதனை அறிக்கையில் மது அல்லது வேறு ஏதேனும் போதை, விஷம் கொடுக்கப்பட்டதா? என்பது தெரியவரும்.
சார்பாக்கின் ரேவதி காலியில் அமைந்துள்ள ஷரன்ஜீத் ஹோட்டல் நுழைவாயில் ஒரு குறுகிய பாதை வழியாக உள்ளது. முதல், இரண்டாவது தளங்களில் 14 சிறிய, பெரிய அறைகள் உள்ளன. கொலைக்குற்றவாளி அர்ஷத், இந்த ஹோட்டலில் 5 படுக்கைகள் கொண்ட அறை எண் 109ஐ தனது பெயரில் நாள் ஒன்றுக்கு ரூ.600 வாடகைக்கு பதிவு செய்துள்ளான். ஹோட்டல் மேலாளர் அர்ஷத் தவிர அனைத்து குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டைகளையும் எடுத்துள்ளார்.
கொலையாளி அர்ஷத் தனது தாய், 4 சகோதரிகளைக் கொன்றுவிட்டு ஹோட்டல் அறையில் எடுத்த வீடியோவும் வைரலானது. வீடியோ எடுக்கும் போது, தந்தை நான்காவது மகளின் வாய், மூக்கை அழுத்திப்பிடித்தபடி அடிப்பதும் அண்ட்ஹ வீடியோவில் பத்இவ்ஆகி உள்ளது. அந்த வீடியோவில் எனது பெயர் அர்ஷத் என்று கூறியுள்ளான்.
அந்த வீடியோவில், ‘‘இந்த மரணத்திற்கு காரணமானவர்கள் ராணு என்கிற அஃப்தாப் அகமது, அலீம் கான், சலீம் கான், டிரைவர், அகமது, அசார் அவரது உறவினர்கள். இவர்கள் பெண்களை விற்கிறார்கள். என்னையும், என் தந்தையையும் சிறைக்கு அனுப்பவும், எங்கள் சகோதரிகளை ஹைதராபாத்தில் விற்கவும் திட்டமிட்டுள்ளனர். நாங்கள் படவுன் குடியிருப்பாளர்கள்.
பிரதமர் மோடி, முதல்வர் யோகி உரையாற்றுகையில், ஒவ்வொரு முஸ்லிமும் ஒரே மாதிரி இல்லை என்று கூறியுள்ளார். இந்தியாவில் எந்த குடும்பமும் இதை மீண்டும் செய்யக்கூடாது. உயிருடன் இருக்கும் போது இல்லை என்றால் இறந்த பிறகு நீதி வழங்குங்கள். என் வீட்டில் கோவில் கட்ட வேண்டும். வீட்டுப் பொருட்களை அனாதை இல்லத்திற்கு வழங்க வேண்டும். நானும், என் தந்தையும் சேர்ந்து என் தாய், 4 சகோதரிகளை கொன்றுவிட்டேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.