spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்தம்பியை கேட்டு அண்ணனை கத்தியால் அறுத்த ஆசாமிகள்

தம்பியை கேட்டு அண்ணனை கத்தியால் அறுத்த ஆசாமிகள்

-

- Advertisement -

அண்ணனை கத்தியால் அறுத்த ஆசாமிகள் …

ஆவடி அடுத்த அயப்பாக்கத்தில் சோமேட்டோ ஊழியரை துரத்தி துரத்தி சிறிய கத்தியால் சரமாரியாக கிழித்த கும்பலின் பதை பதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

we-r-hiring

தம்பியை கேட்டு அண்ணனை கத்தியால் அறுத்த ஆசாமிகள்

ஆவடி அடுத்த அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் சஞ்சய் வ/28. சோமேட்டோவில் உணவு டெலிவரி செய்யும் ஊழியராக பணியாற்றி வருகிறார். இன்று வழக்கம் போல அயப்பாக்கம் அருகில் ஆர்டர் எடுப்பதற்காக நின்றுள்ளர். அப்பொழுது அங்கு வந்த 4 வாலிபர்கள் சஞ்சய்யை நடுரோட்டில் சரமாரியாக தாக்கி உள்ளனர்.

மேலும் அவர்கள் மறைத்து வைத்திருந்த கூர்மையான சிறிய கத்தியால் தாக்கி உள்ளனர்.இதில் சஞ்சய் அவர்களிடமிருந்து தப்பித்து ஓட முயன்ற நிலையில் விடாத அந்த கும்பல் துரத்தி சென்று பலமாக தாக்கி தலை,காது,கழுத்து பகுதிகளில் அறுத்துள்ளனர்.இதனால் ரத்தம் உடல் முழுவதும் வடிந்து காண்போரை அதிர்ச்சியடைய செய்தது.

தம்பியை கேட்டு அண்ணனை கத்தியால் அறுத்த ஆசாமிகள்

இதனை தொடர்ந்து தகவலறிந்து வந்த உறவினர்கள் மற்றும் திருமுல்லைவாயல் போலீசார் அவரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.இந்த சம்பவத்தில் நெஞ்சை பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.அதில் சோமேட்டோ ஊழியர் சஞ்சய் இருசக்கர வாகனத்தில் நின்றிருப்பதும்,போதை வாலிபர்கள் வந்து சரமாரியாக தாக்குவதும்,கத்தியால் அறுக்கும் காட்சிகள் பதிவாகி உள்ளன.

இதனை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலிசார் விசாரணை மேற்கொண்டனர்.முதற்கட்ட விசாரணையில் வெட்டு காயம் அடைந்த சஞ்சயின் தம்பிக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.இதனால் அந்த கும்பல் அவரை தேடி வந்துள்ளது.

தம்பியை கேட்டு அண்ணனை கத்தியால் அறுத்த ஆசாமிகள்

இதனை அறிந்த சஞ்சயின் தம்பி தலைமறைவாகியதால் அவரது அண்ணனை தாக்கி அடித்து பிடித்து வைத்துகொண்டு  எதிரியை வர வைக்கலாம் என எண்ணி தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.இந்த தாக்குதலை நடத்தியது அயப்பாக்கம் பகுதியை சேர்ந்த சந்தோஷ், கோகுல், ஆர்யா, பாலன், மணி ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது.தலைமறைவாக உள்ள 5 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தம்பியை கேட்டு அண்ணனை கத்தியால் அறுத்த ஆசாமிகள்

பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலையில் சோமேட்டோ ஊழியர் மீது தாக்குதல் நடைபெற்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ