spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்பூட்டிய வீட்டிற்குள் கிடந்த இளம்பெண்ணின் சடலம்!

பூட்டிய வீட்டிற்குள் கிடந்த இளம்பெண்ணின் சடலம்!

-

- Advertisement -

மென்பொருள் நிறுவன பணியாளர் நித்யா மர்மான முறையில் கொலை மற்றும் அவரது அறையிலிருந்த 25 சவரன் நகைகளையும் காணவில்லை என்பதால் நித்யாவின் காதலர் பாலமுருகனிடம் போலீசார் விசாரணை.பூட்டிய வீட்டிற்குள் கிடந்த இளம்பெண்ணின் சடலம்! திருச்சி மாவட்டத்தை சேர்ந்த நித்யா(26) சென்னையை அடுத்த அம்பத்தூரில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளாா். சென்னை கொடுங்கையூர் டீச்சர்ஸ் காலனி பகுதியில் வாடகை வீட்டில் நித்யா, பாலமுருகன் என்பவருடன்(living together) வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் நித்யாவின் தாய் மகளை பார்ப்பதற்காக வீட்டிற்கு வந்துள்ளார். பின்னா் தன்னுடைய தேவைக்காக நித்யாவின் பரிசிலிருந்து 4000 ரூபாய் எடுத்ததாக கூறப்படுகிறது. இது நித்யாவிற்கு பிடிக்கவில்லை என்பதால் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையால் நித்யாவின் தாய் மகளிடம் கோபித்துக் கொண்டு  சென்று விட்டாா்.

அதன் பிறகு பாலமுருகன் வீட்டிற்கு வந்துள்ளார். நீண்ட நேரம் தொடர்பு கொண்டும் கதவை திறக்காததால், கீழ் வீட்டில் உள்ளவர்களிடம் சாவி வாங்கி கதவைத் திறந்து உள்ளேச் சென்று பார்த்த பொழுது நித்யா இறந்த நிலையில் கிடந்தாா். உடனே பாலமுருகன் கொடுங்கையூர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தாா். தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு  உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

we-r-hiring

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் நித்தியாவின் தாயிடம் விசாரணை மேற்கொண்டதில் வீட்டில் இருந்து 25 சவரன் நகை காணவில்லை என கூறப்படுகிறது. நகைக்காக பாலமுருகன் என்னுடைய மகளை கொன்றுள்ளதாக நித்யாவின் தாய் காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்தார். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் பாலமுருகனிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தாயிடம் சண்டை போட்டதால் மனம் நொந்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது நகைக்காக இவரை கொலை செய்தார்களா என காவல்துறை முழு விசாரணை பிறகே தெரியவரும்.

ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்… 3-ம் கட்ட சோதனை ஓட்டம்….

MUST READ