spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்ஆப்பிள் பெட்டிகள் திருட்டு - சிசிடிவியால் திருடியவர் கைது

ஆப்பிள் பெட்டிகள் திருட்டு – சிசிடிவியால் திருடியவர் கைது

-

- Advertisement -

சென்னை கோயம்பேடு பழ மார்கெட்டில் ஜி பிளாக்கில் ஆப்பிள் விற்பனை கடை நடத்தி வருபவர் கவுதம் ராஜேஷ் .

ஆப்பிள் பெட்டிகள் திருட்டு - சிசிடிவியால் திருடியவர் கைதுஇவரது கடையில் கடந்த சில நாட்களாக ஆப்பிள் பெட்டிகள் தொடர்ந்து மாயமாகி வந்தது இதையடுத்து கடையில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் மர்ம நபர் ஒருவர் மீன்பாடி வண்டி மூலம் ஆப்பிள் பெட்டிகளை திருடி செல்வது தெரிந்தது.

கொரட்டூர்: ரூ.57 லட்சம் பங்குச் சந்தை மோசடி-இருவர் கைது

we-r-hiring

இதையடுத்து அவரை கையும் களவுமாக பிடிக்க ராஜேஷ் திட்டமிட்டார் இந்த நிலையில் மீண்டும் ராஜேஷ் கடைக்கு கைவரிசை காட்ட வந்த மர்ம நபரை அக்கம்பக்கம் உள்ள வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் துணையுடன் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து கோயம்பேடு போலீசில் ஒப்படைத்தனர்.

போலீஸ் விசாரணையில் ஆப்பிள் திருட்டில் ஈடுபட்டது கடலூர் மாவட்டம் கொண்டான்குறிச்சி கிராமத்தை சேர்ந்த வாலிபர் வெங்கடேசன் (வயது38) என்பது தெரிந்தது. கோயம்பேடு பழ மார்கெட்டில் கூலி வேலை பார்த்து வந்த வெங்கடேசன் மது மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையாகியதும் இதனால் வேலை ஏதும் பார்க்காமல் கூட்ட நெரிசல் உள்ள பழக்கடைகளை குறி வைத்து தொடர்ந்து ஆப்பிள் பெட்டிகளை திருடி விற்று வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

MUST READ