Homeசெய்திகள்க்ரைம்திருச்சி ராம்ஜி நகர் கொள்ளையன் பிரதீப் கைது 

திருச்சி ராம்ஜி நகர் கொள்ளையன் பிரதீப் கைது 

-

பெங்களூர் பேராசிரியரின் கார் கண்ணாடியை உடைத்து லேப்டாப் திருடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி ராம்ஜி நகர் கொள்ளையன் பிரதீப் கைது 

பெங்களூரில் உள்ள தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனத்தில் (NIFT) இணைப்பேராசிரியராக பணியாற்றி வருபவர் நித்யா(48).

சொந்த அலுவல் காரணமாக கடந்த 27ம் தேதி கணவர் ஆனந்தகுமாருடன் காரில் சென்னை வந்தார். அன்று மாலை 18.15 மணி அளவில் அடையாறு பேருந்து நிலையம் பின்புறம் காரை நிறுத்திவிட்டு, தனது கணவர் ஆனந்தகுமாருடன் அருகில் உள்ள பியூட்டி சலூனுக்கு சென்றார்.

பின்னர் 20.00 மணியளவில் திரும்பி வந்து காரை பார்த்தபோது வலது பக்க பின்புற கதவின் கண்ணாடியை உடைத்து காரின் உள்ளிருந்த 50 ஆயிரம் மதிப்புள்ள டெல் லேப்டாப் மற்றும் பேக்கை மர்ம் நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இது தொடர்பாக அளித்த புகாரின் பேரில் அடையாறு போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில் ராம்ஜி நகர் கொள்ளையர்களின் கைவரிசை என தெரிய வந்தது. தீவிர விசாரணைக்கு பின் திருச்சி ராம்ஜி நகரை சேர்ந்த பிரபல கொள்ளையன் பிரதீப்பை(39) கைது செய்தனர். அதனை தொடர்ந்து லேப்டாப்பும் பறிமுதல் செய்யப்பட்டது.

அதிமுக மகளிர் அணி செயலாளருக்கு கொலை மிரட்டல்; மற்றொரு பெண் நிர்வாகி கைது

பிரதீபின் கூட்டாளி உதயகுமாரை(39) போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கைதான பிரதீப் டிப்ளமோ படித்தவர். இவர் மீது தமிழகம் மட்டுமின்றி டெல்லி, மும்பை,ஹைதராபாத் என இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் திருட்டு வழக்குகள் உள்ளன என போலீசார் தெரிவித்தனர் .

வல்லடை என்றழைக்கப்படும் தங்கள் திருட்டு தொழிலை 19 ஆண்டுகளாக செய்து வருவதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் சென்னையில் எத்தனை இடங்களில் கைவரிசை காட்டியுள்ளார்? இந்த கும்பலை சேர்ந்தவர்கள் சென்னையில் தற்போது எங்கெங்கு தங்கியுள்ளனர்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட பிரதீப் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்

MUST READ