Homeசெய்திகள்க்ரைம்பட்டாக் கத்தியுடன் சுற்றித்திரிந்த மர்ம நபர்கள் கைது

பட்டாக் கத்தியுடன் சுற்றித்திரிந்த மர்ம நபர்கள் கைது

-

- Advertisement -

பெரியமேடு மோர் மார்க்கெட் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து அவர்களிடம்  விசாரணை செய்ததில் பயங்கர ஆயுதங்களுடன் பிடிபட்டனர்.

திருட்டு வண்டியில் ஓட முயற்சி செய்த நபரை போலீசார் மடக்கி பிடித்தனர். அப்பகுதியில் ஏற்பட இருந்த கொலை சம்பவம் போலீசாரால் தடுக்கபட்டது.

we-r-hiring

சென்னை பெரியமேடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான மோர் மார்க்கெட் பகுதியில் நேற்று வாகன தனிக்கையில் போலீசார் ஈடுப்பட்டனர். அப்போது, அந்த வழியே வந்த சந்தேகத்தின் இடமான மர்ம நபர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். மேலும், அவர்களிடம் விசாரணை நடத்தினர். இருசக்கர வாகனத்தை பார்த்த போது வாகனத்தின் சீட்டில் 6 கத்திகள் வைத்து இருந்து தெரியவந்ததும், திடீரென போலீசாரிடம் இருந்து ஓட முயற்சி செய்தனர்.

போலீசார் அவர்களை விரட்டி பிடித்தனர். பின்னர் பெரியமேடு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த சென்றனர். அங்கு நடத்திய முதற்கட்ட விசாரணையில் சில தினங்களுக்கு முன்பு மீஞ்சூரில் ஒருவரை கொலை செய்து உள்ளதாகவும் எதிர்தரப்பில் உள்ளவர் தங்களை வெட்ட முயற்சிக்கலாம் ஆதலால் தங்களுடைய தற்காப்பிற்காக கத்திகளை வைத்து இருந்ததாக தெரிவித்துள்ளனர். பிடிபட்ட நபர்கள் திருவள்ளூர் மாவட்ட பொன்னேரி பகுதியை சார்ந்த ஆறுமுகம் ராஜா, அதே பகுதியை சேர்ந்த டில்லி பாபு, சத்திவேல் என்று தெரியவந்தது.

அவர்களிடம் தொடர்ந்து தனித்தனியாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மூன்று பேர் பயணம் செய்த அந்த இருசக்கர வாகனத்தின் சீட்டுக்கு அடியில் ஆறு கத்திகள் எப்படி வைத்திருந்தீர்கள் என்று போலீசார் துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர்.

அப்பொழுது பெரிமேடு பகுதியில் ஒரு வரை கொலை செய்யவே இந்த பகுதிக்கு வந்ததாக போலீசாரிடம் ஒப்புக்கொண்டனர். பெரியமேடு பகுதியில் ஒருவரை கொலை செய்வதற்காக இருசக்கர வாகனத்தை திருடிவந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனை அடுத்து மூன்று பேரையும் நீதிமன்றம் உத்தரவு பேரில் புழல் சிறையில் போலீசார் அடைத்தனர்.

MUST READ