Homeசெய்திகள்க்ரைம்சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்ட வி.ஏ.ஓ: கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு துறை

சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்ட வி.ஏ.ஓ: கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு துறை

-

- Advertisement -

சேலம் மாவட்டத்தில் பட்டா மாறுதல் மற்றும் வாரிசு சான்றிதழ் பெற லஞ்சம் கேட்ட கிராம நிர்வாகி மற்றும் உதவியாளரை லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர் இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்ட  வி.ஏ.ஓ: கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு துறை

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகாவில் செல்லப்பிள்ளை குட்டை கிராமம் உள்ளது. இக்கிராம நிர்வாக அலுவலராக ரவிச்சந்திரனும், கிராம உதவியாளராக பெருமாளும் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் பட்டா மாறுதல் வேண்டியும், வாரிசு சான்றிதழ் வேண்டியும் கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அவரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் தான் 2 சான்றும் வழங்கப்படும் என்று கிராம உதவியாளர் கூறியுள்ளார். இதுகுறித்து ராஜேந்திரன், சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தார்.

பின்னர் போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில் ரசாயனம் தடவிய லஞ்சப் பணத்தை நேற்று கிராம நிர்வாக அலுவலகத்தில் கிராம உதவியாளர் பெருமாளிடம் கொடுத்தார். அவர் தனது பங்கு ரூ.5 ஆயிரத்தை எடுத்து கொண்டு, மீதி ரூ.5 ஆயிரத்தை கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரனிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் தலைமையிலான போலீசார், இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

வீடு புகுந்து தாய் மற்றும் மகள் கொலை! வாலிபரை கைது செய்த போலீஸ்!

MUST READ