Homeசெய்திகள்க்ரைம்விளாத்திகுளம் வழக்கு: மேல்முறையீடு செய்ய குற்றவாளிக்கு அவகாசம் – ஜூலை 6-க்கு ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம்!

விளாத்திகுளம் வழக்கு: மேல்முறையீடு செய்ய குற்றவாளிக்கு அவகாசம் – ஜூலை 6-க்கு ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம்!

-

- Advertisement -

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்வது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஜூலை 6-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.விளாத்திகுளம் வழக்கு: மேல்முறையீடு செய்ய குற்றவாளிக்கு அவகாசம் – ஜூலை 6-க்கு ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம்!​விளாத்திகுளத்தில் பள்ளி மாணவியை கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலை செய்த வழக்கில், தர்ம முனீஸ்வரன் என்பவனைக் குற்றவாளி என அறிவித்த தூத்துக்குடி போக்சோ (POCSO) நீதிமன்றம் அவனுக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. ​கீழ் நீதிமன்றம் விதித்த இந்தத் தூக்கு தண்டனையை முறைப்படி உறுதி செய்யக் கோரி (Death Sentence Confirmation), காவல்துறை தரப்பில் கடந்த ஜூன் 5-ஆம் தேதியன்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை ஏற்கனவே நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்து ஒத்திவைத்திருந்தது.

​இந்நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா மற்றும் பூர்ணிமா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. குற்றவாளி தர்ம முனீஸ்வரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சசிக்குமார், “விசாரணை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை எதிர்த்து இன்னும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, மேல்முறையீடு செய்ய தங்களுக்கு 4 வார கால அவகாசம் வழங்க வேண்டும்” எனக் கோரினார்.

we-r-hiring

இதற்கு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. “வழக்கை வேண்டுமென்றே காலதாமதம் செய்வதற்காகவே குற்றவாளி தரப்பில் 4 வார காலம் அவகாசம் கேட்கிறார்கள். எனவே, இந்த வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும்” என வலியுறுத்தப்பட்டது. ​வழக்கு விசாரணையின் போது, தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் அவர்கள் புகார் அளித்துள்ளதும், அதனடிப்படையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குக் காவல்துறையினர் தற்போது பாதுகாப்பு வழங்கி வருவதையும் நீதிமன்றத்தில் மனுவாகத் தாக்கல் செய்தனர்.

​இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், குற்றவாளி தரப்பில் மேல்முறையீட்டு மனுவை அடுத்த மாதத் தொடக்கத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினர். மேலும், இந்த வழக்கு விசாரணையை வரும் ஜூலை 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஒட்டன்சத்திரம் அருகே சட்டவிரோத மணல் கடத்தல்: தவெக நிர்வாகிக்கு போலீஸ் வலைவீச்சு

MUST READ