spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்மனைவியின் கழுத்தை துப்பட்டாவால் இறுக்கி கொலை – கணவனுக்கு போலீஸ் வலைவீச்சு

மனைவியின் கழுத்தை துப்பட்டாவால் இறுக்கி கொலை – கணவனுக்கு போலீஸ் வலைவீச்சு

-

- Advertisement -

திருப்பூரில் மனைவியை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்த  வட மாநிலத்தை சேர்ந்த கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மனைவியின் கழுத்தை துப்பட்டாவால் இறுக்கி கொலை – கணவனுக்கு பேலீஸ் வலைவீச்சு

we-r-hiring

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராம்சாகர் 35 இவரது மனைவி ராஜ்குமாரி 29 இவர்களுக்கு 9 வயதில் கிருஷ்ணா என்ற மகனும் 10 வயதில் ராதா என்ற பெண் குழந்தையும் உள்ளனர். கடந்த 10 மாதங்களுக்கு முன் பீகார் மாநிலத்திலிருந்து திருப்பூர் வந்ததாக கூறப்படுகிறது.

தற்போது திருப்பூர் விநாயகபுரம் மூன்றாவது வீதியில் உள்ள வாடகை வீட்டில்  குடும்பத்துடன்  வசித்து வருகின்றனர். ராமசாகர் அப்பகுதியில் உள்ள பனியின் நிறுவனத்தில்  தொழிலாளியாக வேலை செய்து வருகிறார் . குழந்தைகள் இருவரும் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். இதனிடையே குடிபோதைக்கு அடிமையான ராமசாகர்  குடித்துவிட்டு மனைவியுடன் அடிக்கடி ரகலையில்  ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது வழக்கம் போல இன்று கணவன் மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த  ராம்சாகர் துப்பட்டாவை கொண்டு ராஜ்குமாரியை கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினார் இது குறித்து வடக்கு போலீசாருக்கு  தகவல் கொடுத்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்த ராஜகுமாரியின் உடலை மீட்டு  பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் தலைமறைவான ராம்சாகரை போலீசார் தேடி வருகின்றனர்.

அமெரிக்காவில் இந்திய மாணவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை

MUST READ