ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு கத்திக்குத்து
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் பெண்ணை கத்திரிக்கோலால் குத்தி தப்பிய நபரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் ஒட்டத்துறை பொம்மை நாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அமுதா (43). இவர் வேப்பம்பட்டு பகுதியில் பூ வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். தினந்தோறும் ஓடும் ரயிலில் பூ வியாபாரம் செய்துவிட்டு அவர் திருவள்ளூர் அடுத்த காக்களூர் பகுதியில் தங்கியுள்ள வீட்டிற்கு ரயில் மூலம் சென்று வருவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த 8-ஆம் தேதி பூ வியாபாரம் முடித்த பின் இரவு 10:30 மணியளவில் அளவில் வேப்பம்பட்டில் இருந்து மின்சார ரயிலில் திருவள்ளூர் ரயில் நிலையம் வந்து இறங்கிய அவர், திருவள்ளூர் ரயில் நிலையத்தில் உறவுக்காரான சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணியம் என்பவரை சந்தித்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்துள்ளர். அப்போது நாகர்கோவில் அச்சரப்பாளையம் பகுதியை சேர்ந்த ஜோசப் ராஜ் (43) குடிபோதையில் அமுதா மற்றும் சுப்பிரமணி ஆகிய இருவரிடமும் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் அமுதா பூ கட் பண்ணும் கத்திரிக்கோல் காட்டி மிரட்டியதாக தெரிகிறது.

இதில் ஆத்திரமடைந்த ஜோசப்ராஜ் அந்த கத்திரிக்கோலை பிடுங்கி அமுதாவை முதுகு, தோள்பட்டை தாடை, வலது பக்க காதுக்கு அருகே மற்றும் கழுத்து பகுதியில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பியுள்ளர் . இதுகுறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அமுதாவை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் அங்கு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். மேலும் இந்த சம்பவம் குறித்து திருவள்ளூர் இருப்பாதை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து அமுதாவை தாக்கிய ஜோசப் ராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அமுதா பல ஆண்களிடம் தகாத உறவு வைத்திருப்பதாகவும், அவர் ரயில் நிலைய நடைமேடையில் உள்ள இருக்கையில் அவரும் சுப்பிரமணியம் அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததால் தான் ஆத்திரமடைந்து சுப்பிரமணியை முதலில் தாக்கியதாகவும் அவரை தாக்குவதை தடுத்த அமுதா, அவர் வைத்திருந்த கத்திரிக்கோலை தன்னிடம் காட்டி மிரட்டியதால் அதே கத்திரிக்கோல் பிடுங்கி அவரை குத்திவிட்டு தப்பியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.