Homeசெய்திகள்க்ரைம்கள்ளக்குறிச்சியில் இளம் பெண் படுகொலை… 25 பவுன் நகை கொள்ளை - கணவர் தலைமறைவு

கள்ளக்குறிச்சியில் இளம் பெண் படுகொலை… 25 பவுன் நகை கொள்ளை – கணவர் தலைமறைவு

-

உளுந்தூர்பேட்டை அருகே புல்லூர் கிராமத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்த இளம் பெண் ரமணி(32) என்பவர் படுகொலை 25 பவுன் நகை மற்றும் முக்கிய ஆவணங்களுடன் கணவர் ஆட்டோ டிரைவர் அசோக் (33) தலைமறைவு

கள்ளக்குறிச்சியில் இளம் பெண் படுகொலை… 25 பவுன் நகை கொள்ளை - கணவர் தலைமறைவுகள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது புல்லூர் கிராமம். இந்த கிராமத்தில் மங்கலம்பேட்டை ரோட்டில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தவர் ரமணி (32) இவர் விருத்தாசலத்தில் உள்ள ஒரு வங்கியில் இன்சூரன்ஸ் பிரிவு ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார்.

இவருக்கு கடந்த 8 வருடங்களுக்கு முன்பு கோயம்புத்தூரில் ஒரு வாலிபருடன் திருமணம் நடைபெற்று உள்ளது. அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வந்து வசித்து வந்துள்ளார். உளுந்தூர்பேட்டையில் இருந்து ஆட்டோவில் செல்லும் போது பாண்டூர் கிராமத்தைச் சேர்ந்த அசோக் (33) என்பருடன் பழக்கம் ஏற்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இதில் அவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நேற்று 20 ஆம் தேதி காலை ரமணியின் பெற்றோர் அவருடைய செல்போனுக்கு தொடர்பு கொண்டுள்ளனர். செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட நிலையில் இருந்துள்ளதால் அவர்கள் நேராக வீட்டிற்கு வந்து பார்த்துள்ளனர். வீடு பூட்டி இருந்ததால் ரமணியை பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடி வந்துள்ளனர்.

திருவள்ளூரில் போலி மருத்துவர் கைது

இந்த நிலையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட நிலையில் இன்று காலை ரமணியின் வீட்டுக்கு சென்ற பெற்றோர் மற்றும் உறவினர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது ஒரு அறையில் இருந்த கட்டிலில் ரமணி படுகொலை செய்யப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

கள்ளக்குறிச்சியில் இளம் பெண் படுகொலை… 25 பவுன் நகை கொள்ளை - கணவர் தலைமறைவுமுகம் முழுவதும் சிதைக்கப்பட்ட நிலையில் ரத்த காயத்துடன் ரமணி சடலமாக கொலை செய்யப்பட்டு இருப்பது குறித்து எடைக்கல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சம்பவ இடத்துக்குச் சென்ற இன்ஸ்பெக்டர் வீரமணி மற்றும் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

வீட்டில் இருந்த 25 பவுன் நகை மற்றும் முக்கிய ஆவணங்களுடன் ரமணியின் கணவர் அசோக் தலைமறைவானதால் போலீசார் அவரை தேடி வருகின்றனர். வங்கி ஊழியர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

MUST READ