நாய் குட்டியை,‘வாக்கிங்’ அழைத்து சென்ற பெண்ணிடம் அநாகரீகமாக நடந்த இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை, பழவந்தாங்கல் பகுதியை சேர்ந்த, 24 வயது பெண் ஒருவர் தினமும் வீட்டிற்கு அருகே தனது நாய் குட்டியை,‘வாக்கிங்’ அழைத்து செல்வது வழக்கம். அப்போது, அதே பகுதியை சேரந்த ஒரு நபர் அந்த பெண்ணை பார்த்து சிரிப்பது, பின் தொடர்வது, கிண்டல் செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இதனை அந்த பெண் கண்டு கொள்ளாமல் இருந்தார். இந்நிலையில், கடந்த,13ம் தேதி அந்த பெண் நாய் குட்டியை,‘வாக்கிங்’ அழைத்து சென்றபோது, அதனை தன்னிடம் தருமாறு கேட்டுள்ளார்.

அந்த பெண் தரமறுத்தபோது, வலுக்கட்டாயமாக நாயை அந்த பெண்ணிடம் பிடுங்குவதுபோல, பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இது குறித்து வெளியே கூறினால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் படி பழவந்தாங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், பெண்ணிடம் ஆநாகரீகமாக நடந்தது சென்னை, பழவந்தாங்கல், வீரமாமுனிவர் தெருவை சேர்ந்த கார்த்திக்(24), என்பது தெரியவந்தது.
மேலும், விசாரணையில் அவர் மீது பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு உள்ளிட்ட மூன்று குற்ற வழக்குகள் உள்ளது என்பதும் தெரியவந்ததுள்ளது. இதையடுத்து, அவரை கைது செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
வேலைக்கு சேர்ந்த ஏழேநாளில் ஊழியரின் செயல்….அதிர்ச்சியில் உரிமையாளர்!