- Advertisement -
வீட்டில் 3 அடி நீள பாம்பு: வனத்துறையினர் மீட்டனர்!
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் வீட்டில் பதுங்கியிருந்த 3 அடி நீள பாம்பை தீயணைப்புத் துறையினர் பிடித்தனர்.
சின்னாளப்பட்டி தேவி நகர் விரிவாக்க பகுதியை சேர்ந்தவர் கணேசன். இந்நிலையில் மாலை நேரத்தில் வீட்டின் பின்புறத்தில் இருந்த எலி பொந்துக்குள் பாம்பு ஒன்று புகுந்து கொண்டது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கணேசனின் மனைவி மீனா, உடனடியாக ஆத்தூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.


பாம்புகளை பிடிப்பதற்கான உபகரணங்களுடன் விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் அங்கிருந்த சிமெண்ட் பலகையை உடைத்து அதற்குள் பதுங்கியிருந்த 3 அடி நீளமுள்ள நல்லபாம்பை லாவகமாக பிடித்தனர். அதன் பின்னர் அந்த பாம்பை ஆத்தூர் வனச்சரக பகுதிக்குள் பாதுகாப்பாக விடுவித்தனர்.
