Homeசெய்திகள்மாவட்டம்விழுப்புரத்தில் நூலகம் வேண்டி 5ம் வகுப்பு மாணவி மனு

விழுப்புரத்தில் நூலகம் வேண்டி 5ம் வகுப்பு மாணவி மனு

-

- Advertisement -

திருமலைப்பட்டு கிராமத்தில் நூலகம் அமைக்க கோரி ஐந்தாம் வகுப்பு மாணவி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் திரும்பும் திசை எல்லாம் அரசு மது கடைகளும், அதில் குடித்து விட்டு விழுந்துகிடக்கும் மனிதர்கள் ஏராளம். அதேபோன்று அனைத்து கிராமங்களிலும் விஜய் ரசிகர் மன்றம், அஜித் ரசிகர் மன்றம் என்று புதிய புதிய நடிகர்களுக்கு எல்லாம் ரசிகர் மன்றம் அமைத்து, அவர்களுக்கு கட்டவுட்டு வைத்து பால் அபிஷேகம் செய்துவருகிறார்கள். ஆனால் அந்த மாவட்டத்தில் இளைஞர்கள் பொது அறிவை கற்கும் வகையில் நல்ல நூலகம் இல்லை. அப்படி ஒரு சில இடங்களில் நூலகம் இருந்தாலும் அதனை பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்து போய் இருக்கும்.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே உள்ள திருமலைப்பட்டு கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி வணிதா, இன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தார்.

we-r-hiring

அதில், எங்கள் கிராமத்தில் நூலக வசதியில்லாததால் நூலகம் அமைத்து தர அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி மிக துணிச்சலாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று நூலகம் அமைக்க கோரிக்கை மனு அளித்திருப்பது மிகுந்த பாராட்டை பெற்றுள்ளது.

MUST READ