- Advertisement -
ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் ஏற்றி வந்த லாரி எதிர்பாராத விதமாக ஸ்ரீபெரும்புதூர் அருகே திருவள்ளூர் சாலையில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு கனரக லாரி ஒன்று காஞ்சிபுரம் நோக்கி சென்று கொண்டு இருந்தது.


வாகனம் திருவள்ளூர் சாலையில் ஸ்ரீபெரும்புதூர் நோக்கி வரும்போது காட்டுக் கூட்ரோட்டில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்தது.
இதில் ஓட்டுனரும், க்ளீனரும் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.
வாகனம் சாலையோரம் கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை.
விபத்து குறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


