Homeசெய்திகள்மாவட்டம்திண்டுக்கல் முத்தழகுபட்டியில் வினோதம்: காணிக்கையாக வந்த குழந்தைகளை ஏலம் விடும் திருவிழா! விடிய விடிய கம...

திண்டுக்கல் முத்தழகுபட்டியில் வினோதம்: காணிக்கையாக வந்த குழந்தைகளை ஏலம் விடும் திருவிழா! விடிய விடிய கம கம கறி விருந்து!

-

- Advertisement -

திண்டுக்கல் மலைக்கோட்டை பின்புறம் அமைந்துள்ள முத்தழகுப்பட்டியில் 350 ஆண்டுகளுக்கு மேல் பழமையான புனித செபஸ்தியார் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் 4 நாட்கள் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.

திண்டுக்கல்

we-r-hiring

அந்த வகையில், இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை நடைபெற உள்ள இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான அன்னதான நிகழ்ச்சி, 3-ஆம் நாளான இன்று (04.08.2026) மாலை தொடங்கி விடிய விடிய அதிகாலை வரை நடைபெற்று வருகிறது.

குழந்தை பாக்கியம் பெற வினோத வேண்டுதல்:

முன்னதாக, புனித செபஸ்தியாரிடம் வேண்டுதல் வைக்கும் பக்தர்கள், தங்களது வேண்டுதலை அவர் நிவர்த்தி செய்து கொடுத்ததற்காக நன்றி செலுத்தும் வகையில் அரிசி, ஆடு, கோழி, தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, வெங்காயம் போன்ற சமையல் பொருட்களைக் காணிக்கையாகச் செலுத்துகின்றனர்.

திருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், குழந்தை வரம் வேண்டி இக்கோவிலில் வேண்டுதல் வைக்கின்றனர். குழந்தை பிறந்தால் அதைச் செபஸ்தியார் கோவிலில் ஒப்படைத்து விடுவதாக நேர்த்திக்கடன் கொள்கின்றனர். கோரிக்கை நிறைவேறியதும், பெற்றோர் தங்கள் குழந்தையைக் கோவில் நிர்வாகிகளிடம் ஒப்படைக்கின்றனர்.

பின்னர், அக்குழந்தையைக் கோவில் வளாகத்தில் வைத்து நிர்வாகிகள் ஏலம் விடுவார்கள். அப்போது குழந்தையின் உறவினர்கள் ஏலத்தில் கலந்துகொண்டு, குழந்தைக்கான தொகையைக் கோவிலுக்குச் செலுத்தி குழந்தையை மீட்டுச் செல்கின்றனர். இன்று நடைபெற்ற ஏலத்தில் ஒரு குழந்தை ரூ.1,000-க்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.

ஊர் மக்கள் இணைந்து நடத்தும் பிரம்மாண்ட கறி விருந்து:

மாலை தொடங்கி அதிகாலை வரை விடிய விடிய நடைபெறும் இந்த அன்னதானத்திற்குச் சமைப்பதற்கோ அல்லது பந்தி பரிமாறுவதற்கோ வெளியில் இருந்து ஆட்கள் எவரும் வேலைக்கு அமர்த்தப்படுவதில்லை.

முத்தழகுப்பட்டியைச் சேர்ந்த இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் என அனைவரும் இந்நாளில் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைகளுக்குச் செல்லாமல் விடுமுறை எடுத்துக்கொள்கின்றனர். காய்கறிகள் நறுக்குவது, சமையல் செய்வது என ஊர் மக்கள் ஒவ்வொருவரும் ஒரு பணியைப் பொறுப்பேற்றுச் செய்து வருகின்றனர்.

கோவில் வளாகத்தில் 10-க்கும் மேற்பட்ட அடுப்புகள் அமைக்கப்பட்டு, முத்தழகுப்பட்டியைச் சேர்ந்த இளைஞர்கள் பெரிய அளவிலான அண்டாக்களில் சாதம் மற்றும் கறிக்குழம்பு தயாரிக்கும் பணியில் காலையிலிருந்தே ஈடுபட்டனர்.

ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு:

சமைக்கப்பட்ட சாதம் கோவில் வளாகத்தில் உள்ள கூடத்தில் மலைபோல் குவிக்கப்பட்டு இருந்தது. அதேபோல், தயார் செய்யப்பட்ட கறிக்குழம்பு பெரிய பெரிய டிரம்களில் நிரப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்த கறி விருந்திற்காக:

  • ஆட்டுக்கறி: 3,000 கிலோ (சுமார் 3,000 ஆடுகள் காணிக்கை)

  • கோழிக்கறி: 5,000 கிலோ (சுமார் 5,000 கோழிகள் காணிக்கை)

  • அரிசி சாதம்: 150 மூட்டை

இவை அனைத்தும் தயார் செய்யப்பட்டு, மாலை முதல் இரவு முழுவதும் பக்தர்களுக்கு விடிய விடியக் கறி விருந்து அன்னதானமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்தச் சிறப்புமிக்க அன்னதானத்தில் திண்டுக்கல், மதுரை, தேனி, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து வருகை தந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு உணவருந்திச் செல்கின்றனர். திருவிழாவை முன்னிட்டு அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நேரடிப் பேட்டிகள் (Interviews):

  1. அம்பிகா – குழந்தையின் தாயார்

  2. தல சாமி – கோவில் நிர்வாகி

  3. தெய்வ கனி – பொதுமக்கள்

  4. ஜான்சி – அன்னதானம் சாப்பிட வந்த பொதுமக்கள்

  5. குட்டி – கோவிலுக்காகச் சம்பளம் வாங்காமல் கறி வெட்ட வந்தவர்

  6. ஜஸ்டின் திரவியம் – விடுமுறை எடுத்து வேலை பார்ப்பவர்

  7. அந்தோணியம்மாள் – திருவிழாவிற்காக விடுமுறை எடுத்து வேலை பார்ப்பவர்

  8. அருளானந்தம் – ஊர் நிர்வாகி

எதிர்க்கட்சித் தலைவர் கைது: காட்டாட்சி தர்பாரை நடத்துகிறது ‘கோமாளி’ அரசு – தமிழன் பிரசன்னா!

MUST READ