ஈரோட்டில் விறுவிறுபாக வாக்குபதிவு நடைபெற்று வருகிறது காலை 10 மணி வரை 10 சதவிகிதம் வாக்கு பதிவாகி உள்ளது. மக்கள் ஆர்வமுடன் வாக்கு பதிவு செய்து வருவதால் வேட்பாளர்கள் வெற்றி யாருக்கு என்று தெரியாமல் குழப்பம் அடைந்துள்ளனர்.
திருமகன் ஈவெரா, ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து கடந்த மாதம் 4-ந் தேதி மாரடைப்பு காரணமாக திடீர் மரணம் அடைந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஈரோட்டில் இடைத்தேர்தருக்கான வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஈ.வி. கே.எஸ். இளங்கோவன் கை சின்னத்தில் போட்டியிடுகிறார்.


அ.தி.மு.க. சார்பாக இரட்டை இலை சின்னத்தில் கே.எஸ்.தென்னரசு போட்டியிடுகிறார். தே.மு.தி.க. சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் மற்றும் சுயேச்சைகள் என 77 பேர் போட்டியிடுகின்றனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் 1,11,025 ஆண் வாக்காளர்களும், 1,16,497 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 25 பேர் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்கள் உள்ளனர்.
இவர்களில் ஏற்கனவே 80 வயது கடந்த முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், போலீசார் என தங்களது தபால் வாக்கினை முன்னதாகவே பதிவு செய்து விட்டனர்.
இந்த நிலையில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில் பொதுமக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இன்று காலை 9 மணி நிலவரப்படி 10 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. 2 மணிநேரமாக விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
வாக்குகள் அதிகமாக பதிவாகி வருவதால் ஆளும் கட்சி கூட்டணி வேட்பாளர், எதிர் கட்சி வேட்பாளர் இருவரும் தங்களுக்கே சாதகமாக அமையும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர்.
