spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்மாவட்டம்இன்ஸ்டன்டாக முடிந்த இன்ஸ்டாகிராம் காதல் - கணவர் கைது

இன்ஸ்டன்டாக முடிந்த இன்ஸ்டாகிராம் காதல் – கணவர் கைது

-

- Advertisement -

சென்னையில் பணியாற்றிக் கொண்டிருந்த சிதம்பரத்தை சேர்ந்த பெண் வேலூரில் உடல் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான பெண்ணை காதலித்து ரகசிய திருமணம் செய்த நிலையில் ,  8 மாதத்தில் காதல் கசந்து கொலையில் முடிந்திருக்கிறது.

we-r-hiring

காதலியை ரகசிய திருமணம் செய்த காதலர் திருமணமாகி 8 மாதமாக நண்பர் வீட்டிலேயே தங்க வைத்து குடும்பம் நடத்தியுள்ளார். முறைப்படி திருமணம் செய்ய வற்புறுத்தியதால் 7 மாத கர்ப்பிணி என்றும் பாராமல் காதல் மனைவியை கொலை செய்து மலையிலிருந்து வீசி கொலை செய்த கணவர் சிக்கியுள்ளார்.

மனைவியை கொலை செய்த கணவர் சிக்கியது எப்படி?

வேலூர் பாலமதி மலையில் உள்ள பாறை இடுக்கு பள்ளத்தில் சுமார் 22 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. இதனைக் கண்ட அந்த பகுதி மக்கள் பாகாயம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

சடலமாக கிடந்த பெண்ணின் முகம் சிதைக்கப்பட்டிருந்தது. அவர் சுடிதார் அணிந்திருந்த நிலையில் கழுத்தில் தாலி இருந்தது. திருமணமானவர் என்று தெரிந்த நிலையில் அவர் யார் என்பது தெரியவில்லை. அவரை கொலை செய்து பாறை மேலிருந்து தூக்கி வீசி இருக்கலாம் என சந்தேகப்பட்டனர். போலீசார் உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் கொலை செய்யப்பட்ட பெண் சிதம்பரத்தைச் சேர்ந்த குணப்பிரியா என்பது தெரிய வந்தது. இது தொடர்பாக சிதம்பரத்தை சேர்ந்த அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

அவர்கள் வேலூர் சென்று குணப்பிரியாவின் உடலை பார்த்து தங்கள் மகள் தான் என அடையாளம் காட்டினர். குணப்பிரியாவின் பெற்றோர் கொடுத்த தகவலின் அடிப்படையில் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் பணி புரியும் காவல் உதவி ஆய்வாளர் ரமேஷ் பாபு மகன் 23 வயது கார்த்தியை பாகாயம் போலீசார் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் சிதம்பரத்தை சேர்ந்த குணப்பிரியா சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அவருடன் கார்த்திக்கு இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்து வந்த நிலையில் கார்த்திக் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு குணப்பிரியாவை ரகசிய திருமணம் செய்து வேலூருக்கு அழைத்து சென்றுள்ளார். ஜீவா நகர் பகுதியில் உள்ள நண்பர் வீட்டில் இருவரும் தங்கியுள்ளனர்.

இந்நிலையில் குணப்பிரியா ஏழு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். நண்பர் வீட்டில் தங்க வைத்ததால் இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த மாதம் சிதம்பரத்தில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு சென்றவர் கடந்த 25 ஆம் தேதி வேலூர் திரும்பி உள்ளார்.

அவரை பாலமதி மலைக்கு அழைத்து சென்று உள்ளார். அங்கு தன்னை முறைப்படி திருமணம் செய்து தனியாக வாடகைக்கு வீடு பார்த்து அழைத்து செல்லும்படி வற்புறுத்தி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கார்த்தி கட்டையால் தலையில் அடித்துள்ளார்.

இதில் குணப்பிரியா இறந்ததாகவும் இதனால் என்ன செய்வது என தெரியாமல் உடலை மலையில் இருந்து தள்ளிவிட்டு வந்ததாக கார்த்தி போலீசாரிடம் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர்.

இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்த பெண்ணை ரகசிய திருமணம் செய்து 8 மாதமாக யாருக்கும் தெரியாமல் நண்பர் வீட்டிலேயே வைத்து குடும்பம் நடத்திய நிலையில் 7 மாத கர்ப்பிணியாக இருந்த மனைவியை காதல் கணவர் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

MUST READ