மூன்றரை அடிக்கும் குறைவாக உயரம் கொண்ட சசிகுமாருக்கும், சாந்திக்கும். இன்று திருமணம் முடிந்தது. கரூர் மாவட்டத்தில் உள்ள வெங்கமேடு வட்டம் வீரபாண்டிய கட்டபொம்மன் தெருவை சேர்ந்த 40வயதான சசிகுமார் பி.காம்(B.COM) படித்து முடித்துவிட்டு சுயதொழில் ஒன்றை செய்து வருகிறார். அவரின் உயரம் 3.5அடி.
சசிகுமாரின் மாமாவான சுப்பிரமணி கரூர் வணிகவரித்துறை அலுவலகத்திற்கு தற்செயலாக சென்ற பொழுது அங்கு மாற்றுதிரனாளியான சாந்தியை சந்தித்தார்.
சாந்தி வணிகவரித்துறை அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
பின் இரு வீட்டார் சம்மதத்துடனும் சாந்தி மற்றும் சசிகுமாரின் திருமணம் இன்று காலை அதே பகுதியை சேர்ந்த சித்தி விநாயகர் ஆலையத்தில் நண்பர்கள் மற்றும் உறவினரின் முன்னிலையில் திருமணம் முடிந்தது.


திருமணம் முடிந்த பின் அருகில் உள்ள மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சாந்தி மற்றும் சசிகுமார் தம்பதியிடம் வாழ்த்து கூறிவிட்டு பேசினோம், நான்(சசிகுமார்) பி.காம்(B.COM) முடித்துவிட்டு பல பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கு விண்ணபித்தேன், ஆனால் உயரம் குறைவு என்பதால் கிடைக்கவில்லை, பின் சுயதொழில் தொடங்கினேன், பல இடங்களில் பெண் தேடினார்கள் இருந்தும் யாரும் என்னை மனமுடிக்க முன் வரவில்லை.
சரி நமக்கான பெண் நம்மை தேடி வருவாள் என்ற நம்பிக்கையோடு என் தொழிலை மட்டும் செய்து கொண்டு வந்தேன். அதன் பின் தான் சாந்தியை சந்தித்தேன். எங்கள் இருவரின் உயரத்தை குறையாக பேசியவர்கள் முன் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று நம்பிக்கையோடு அவள் கையையும் பிடித்தேன் என்றார்.
நான்(சாந்தி) பி.எஸ்.சி(B.SC) முடித்துவிட்டு வணிகவரித்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறேன் எனக்கு வயது35. “வாழ்வதற்கு உயரம் ஒரு தடையில்லை எங்கள் மனதில் உள்ள தன்னம்பிக்கைக்கு குறைவு இல்லை” நாங்களும் மற்றவர்கள் முன் உயர்ந்து நிற்போம் என்று கூறிவிட்டு மணமேடைக்கு சென்று விட்டார்கள்.


