Homeசெய்திகள்மாவட்டம்பரபரப்பான ஆலங்குளம்: காமராஜர் பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகள் ரத்து! ராக்கெட் ராஜா ஆதரவாளர்கள் அட்ராசிட்டியால் பதற்றம்...

பரபரப்பான ஆலங்குளம்: காமராஜர் பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகள் ரத்து! ராக்கெட் ராஜா ஆதரவாளர்கள் அட்ராசிட்டியால் பதற்றம் – நூற்றுக்கணக்கான போலீசார் குவிப்பு!

-

- Advertisement -

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழா கொண்டாட்டங்களின் போது ஏற்பட்ட பயங்கர மோதல் மற்றும் அத்துமீறல்களைத் தொடர்ந்து, அடுத்தடுத்து திட்டமிடப்பட்டிருந்த அனைத்துப் பிறந்தநாள் விழுது நிகழ்ச்சிகளும் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

காமராஜர்

we-r-hiring

அப்பகுதியில் மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்க நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. சினிமா பட பாணியில் ஆலங்குளத்தை உலுக்கிய இந்த பரபரப்புச் சம்பவத்தின் விரிவான செய்தி விவரம் வருமாறு:

​ராக்கெட் ராஜா ஆதரவாளர்களின் அட்ராசிட்டி!

​பெருந்தலைவர் காமராஜரின் 124-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி மாவட்டம் ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு அரசியல் கட்சியினரும், நற்பணி மன்றத்தினரும் விழா கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிலையில், விழாக் களத்திற்குள் புகுந்த பனங்காட்டுப் படை கட்சியின் ஹெச். ராக்கெட் ராஜாவின் ஆதரவாளர்கள் சிலர் திடீரென அத்துமீறல்களில் ஈடுபட்டு, அங்கிருந்தவர்களுடன் பயங்கர மோதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் திடீர் அட்ராசிட்டி மற்றும் மோதல் சம்பவத்தால் விழா நடைபெற்ற இடம் போர்க்களமாக மாறியதுடன், பொதுமக்களும் அஞ்சி ஓடும் நிலை ஏற்பட்டது.

​அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் அதிரடி ரத்து!

​இந்த மோதல் சம்பவத்தின் தொடர்ச்சியாகப் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் சூழல் உருவானதால், ஆலங்குளம் பகுதியில் இன்று நடைபெறவிருந்த மற்ற அனைத்துக் காமராஜர் பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகளையும் உடனடியாக ரத்து செய்யக் காவல்துறை தரப்பில் உத்தரவிடப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக விழா ஏற்பாட்டாளர்களும் எஞ்சிய நிகழ்ச்சிகளைத் தற்காலிகமாகக் கைவிட்டுள்ளனர்.

​டிஐஜி மற்றும் எஸ்பி நேரில் அதிரடி ஆய்வு!

​ஆலங்குளத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை கைமீறிப் போகாமல் தடுக்க, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான ஆயுதப்படை போலீசார் அதிரடியாக வரவழைக்கப்பட்டு முக்கியச் சந்திப்புகள் மற்றும் காமராஜர் சிலைக்குப் பலத்த பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது. பதற்றம் நிலவி வரும் ஆலங்குளம் பகுதிக்குத் திருநெல்வேலி சரக டிஐஜி (DIG) திருநாவுக்கரசு மற்றும் தென்காசி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) அசோக் குமார் ஆகியோர் நேரில் விரைந்து சென்று, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துத் தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.

மோதல் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களைக் கண்டறிந்து உடனடியாகக் கைது செய்யத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், வதந்திகளைப் பரப்புபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை பாயும் என்றும் உயர் காவல் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்த சம்பவத்தால் ஆலங்குளம் பகுதியில் தற்போது கடைகள் அடைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊரடங்கு போன்ற சூழல் நிலவி வருகிறது.

MUST READ