spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்மாவட்டம்நாகர்கோவிலில் புதிய மாநகராட்சி அலுவலகம்

நாகர்கோவிலில் புதிய மாநகராட்சி அலுவலகம்

-

- Advertisement -

நாகர்கோவிலில் ரூபாய் 10 கோடியே 50 லட்சம் செலவில் கட்டப்பட்ட மாநகராட்சி புதிய அலுவலகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

நாகர்கோவில் மாநகராட்சி புதிய அலுவலகம் 10 கோடிய ஐம்பது லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது.

we-r-hiring

தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே. என். நேரு, தமிழ்நாடு தகவல் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ,குமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், மாநகராட்சி ஆணையர் ஆனந்த மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .

கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி முதல் மாநகராட்சிகள் தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.

புதிதாக கட்டப்பட்டுள்ள மாளிகை கீழ் தளம், முதல் தளம், இரண்டாம் தளம், மூன்றாவது தளம் மற்றும் நான்காவது தளம் ஆகிய நான்கு தளங்கள் கொண்டது.

கீழ் தளத்தில் வாகனம் நிறுத்திமிடம், அறை மற்றும் ஓட்டுநர்கள் ஓய்வறையும், முதல் தளத்தில் மேயர் அறை முக்கிய விருந்தினர்கள் அமரும் அறை, நிர்வாகப் பிரிவு தகவல் தொழில்நுட்ப பிரிவு, தாய்மார்களுக்கு பாலூட்டும் அறை, பார்வையாளரை உணவு அருந்தும் அறை, வரவேற்ப்பறை ,வரவு செலவு மையம் மற்றும் கழிவறை அமைக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது தளத்தில் ஆணையாளர் அறை ,மாநகர பொறியாளர் அறை, கலந்தாய்வு அரங்கம், காணொளி காட்சிகளை மற்றும் கழிவறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

மூன்றாவது தளத்தில் மாமன்ற கூட்ட அரங்கம் , மாநகர் நல அலுவலர் சுகாதார பிரிவு உள்ளிட்டவைகளும், நான்காவது தளத்தில் பத்திரிகையாளர், வருவாய் பிரிவு அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளன.

இதன் முக்கிய சிறப்பு அம்சங்களாக, தீயணைப்பு ஏற்பாடுகள், அனைத்து தளங்களிலும் கண்காணிப்பு கேமரா வசதி, இரண்டு லிப்ட் வசதி பொது மாமன்ற அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

MUST READ