குமாரபாளையம் தனியார் பள்ளியில் பயின்ற மாணவனுக்கு கல்வி கட்டணம் செலுத்தாததால் மாற்று சான்றிதழ் பெற மாணவனின் தாயை தகாத வார்த்தையில் திட்டும் பள்ளியின் தாளாளர்.நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள மாரக்கால் காடு பகுதியில் ஹோலி கிராஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு எல்கேஜி முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பாடப்பிரிவுகள் உள்ளது. இந்தப் பள்ளியில் ஓட்டுநராக பணிபுரியும் ஆனந்த் என்பவரின் மகன் 12 ஆம் வகுப்பு கடந்த வருடம் படித்து முடித்துள்ளார்.
தற்பொழுது பொறியியல் பாடப் பிரிவில் சேர்வதற்காக செல்ல வேண்டி இருந்ததால், அவரது தாயார் கீதா மாணவனின் நிலுவை கட்டணமாக உள்ள 20 ஆயிரம் ரூபாயில் ஐந்தாயிரம் மட்டும் செலுத்தி மீதமுள்ள தொகை எனது கணவரின் மாத சம்பளத்தில் பிடித்துக் கொள்ளுங்கள் எனவும், தனது மகனின் கல்விச்சான்றிதழை பொறியியல் கவுன்சிலிங் செல்வதற்கு கொடுத்து உதவுங்கள் என்று கேட்ட பொழுது, பள்ளியின் தாளாளர் கிருஷ்ணன், மாணவனின் தாயாரை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், யாரிடம் வேண்டுமானாலும் சொல்லிக்கொள் என்று மிரட்டிய ஆடியோ தற்பொழுது சமூகத்தில் வேகமாக பரவி வருகிறது.
சோழர் காலம் பொற்காலம், ஸ்டாலின் காலம் வேதனையின் காலம்! – முன்னாள் அமைச்சர் விமர்சனம்
