Homeசெய்திகள்மாவட்டம்"காசுக்குலாம் விக்க மாட்டோம்ங்க!" கல்பட்டு கிராம மக்களின் மெகா மனசு.. நெகிழ்ச்சியான மீன்பிடி திருவிழா!

“காசுக்குலாம் விக்க மாட்டோம்ங்க!” கல்பட்டு கிராம மக்களின் மெகா மனசு.. நெகிழ்ச்சியான மீன்பிடி திருவிழா!

-

- Advertisement -

“சொந்த பந்தங்களுக்குக் கொடுத்து சந்தோஷமா சாப்பிடுவோம்!” – ஆர்வத்துடன் மீன்களைப் பிடித்து கிராம மக்கள் மகிழ்ச்சி!"காசுக்குலாம் விக்க மாட்டோம்ங்க!" கல்பட்டு கிராம மக்களின் மெகா மனசு.. நெகிழ்ச்சியான மீன்பிடி திருவிழா!

விழுப்புரம் அருகேயுள்ள கல்பட்டு கிராமத்தில் பாரம்பரியமிக்க மீன்பிடி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. ஊதுவத்திப் புகையோடும், மேள தாள சத்தத்தோடும் கிராம மக்கள் திரளாகக் கலந்துகொண்ட இத்திருவிழா, அப்பகுதியில் பெரும் திருவிழாக் கோலத்தை உருவாக்கியிருந்தது."காசுக்குலாம் விக்க மாட்டோம்ங்க!" கல்பட்டு கிராம மக்களின் மெகா மனசு.. நெகிழ்ச்சியான மீன்பிடி திருவிழா!

we-r-hiring

பாரம்பரிய மீன்பிடித் திருவிழா
கிராமத்தின் பொதுவான நீர்நிலைகளில் நீர் வற்றும் தருணத்திலோ அல்லது குறிப்பிட்ட பருவத்திலோ ஊர் பொதுமக்கள் அனைவரும் இணைந்து மீன்பிடிக்கும் கலாச்சாரம் தமிழகத்தின் பல கிராமங்களில் பாரம்பரியமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில், கல்பட்டு கிராமத்தில் நடைபெற்ற இந்த மீன்பிடித் திருவிழாவில் குழந்தைகளும், பெண்களும், முதியவர்களும் என அனைத்துத் தரப்பு மக்களும் மிகுந்த உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.

அள்ளிச் செல்லப்பட்ட மீன்கள்: காசுக்கு விற்பனை கிடையாது! நீர்நிலைகளில் இறங்கிய மக்கள் வலைகள், தூண்டில்கள் மற்றும் பாரம்பரியக் கருவிகளைக் கொண்டு மீன்களை ஆர்வத்துடன் பிடித்தனர். இதில் ஜிலேபி, விரால், கெண்டை உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் ஏராளமான அளவில் சிக்கின.  இத்திருவிழாவின் சிறப்பம்சமாகக் கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்ததாவது:

“இங்க பிடிக்கிற ஜிலேபி, விரால், கெண்டை மீன்களை நாங்க எப்போதுமே காசு கொடுத்து விற்க மாட்டோம். குளத்தில் கிடைக்கிற இந்த மீன்களை எங்கள் சொந்த பந்தங்களுக்கும், ஊர் மக்களுக்கும் பகிர்ந்து கொடுத்துவிட்டு, நாங்களும் சமைத்துச் சந்தோஷமாகச் சாப்பிடுவோம்.” என்று பெருமிதத்துடன் தெரிவித்தனர். பணமதிப்பைத் தாண்டி கிராமத்து மனிதர்களின் கூட்டுறவையும், அன்பையும் வெளிப்படுத்தும் விதமாக இந்த நிகழ்வு அமைந்தது அனைவரையும் நெகிழச் செய்தது.

திருவள்ளூர் அருகே சோகம்: இருசக்கர வாகனம் மீது கல்லூரி பேருந்து மோதி எலக்ட்ரீசியன் பலி; சிசிடிவி காட்சி வெளியீடு!

MUST READ