spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாவங்கதேச வன்முறை - பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை

வங்கதேச வன்முறை – பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை

-

- Advertisement -

வங்கதேச அரசியல் நிலவரம் தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூடி
ஆலோசனை மேற்கொண்டது.

வங்கதேசத்தில் வெடித்துள்ள கலவரம் காரணமாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இந்த நிலையில் டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு கூட்டம் நடைபெற்றது.

we-r-hiring

இக்கூட்டத்தில் வங்காள தேச விவகாரம் குறித்து பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷ◌ா , வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நிதி அமைச்சர் கலந்து கொண்டனர்.

ஹிண்டன் விமானப்படை தளத்தில் ஷேக் ஹசீனாவை சந்தித்தது குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பிரதமரிடம் விளக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

 

 

MUST READ