Homeசெய்திகள்இந்தியாகர்நாடகாவில் ஆட்சியை கவிழ்க்க மத்திய அரசு முயற்சி - சித்தராமையா குற்றச்சாட்டு

கர்நாடகாவில் ஆட்சியை கவிழ்க்க மத்திய அரசு முயற்சி – சித்தராமையா குற்றச்சாட்டு

-

- Advertisement -

நில மோசடி விவகாரத்தில் தன் மீது வழக்குப்பதிவு செய்ய கர்நாடக ஆளுநர் அனுமதி அளித்துள்ளது அரசியல் சாசனத்திற்கு எதிரானது  முதலமைச்சர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.

முடா எனப்படும், மைசூர் நகர்புற மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் நிலம் ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது. முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.9 ஏக்கர் நிலத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கையகப்படுத்தியது. தனது மனைவிக்கு சொந்தமான நிலத்தை சட்ட விரோதமாக கையகப்படுத்தியதற்கு இழப்பீடாக வீட்டு மனைகள் வழங்கப்பட்டதாக முதல்வர் சித்தராமையா விளக்கம் அளித்தார்.

கர்நாடகாவில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்?- தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியானது!
File Photo

இந்த நிலையில், நிலஒதுக்கீடு புகார் தொடர்பாக முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்யகோரிய மனுவை ஏற்று கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், சித்தராமையா மீது வழக்கு தொடர் அனுமதி வழங்கினார். இது கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நில மோசடி விவகாரத்தில் தன் மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் அனுமதி அளித்துள்ளது அரசியல் சாசனத்திற்கு எதிரானது கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிகையில், பா.ஜ.க, மதசார்பற்ற ஜனதா தளம், மத்திய அரசு ஆகியவை இணைந்து கர்நாடக காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க சதி செய்வதாக சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் அரசு நிறைவேற்றி வருவதை பா.ஜ.கவினரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்று தெரிவித்துள்ள சித்தராமையா, நிலமோசடி புகாரில் தன்மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் அனுமதி அளித்து இருப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என குற்றம்சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் ஆளுநருக்கு எதிராக நீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்தப்படும் என்றும் முதலமைச்சர் சித்தராமையா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்

MUST READ