spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாமணிப்பூரில் துப்பாக்கி சண்டையில் 11 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

மணிப்பூரில் துப்பாக்கி சண்டையில் 11 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

-

- Advertisement -

மணிப்பூர் மாநிலம் ஜிரிபாம் மாவட்டத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் உடனான துப்பாக்கிச் சண்டையில் 11 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்

மணிப்பூரில் மெய்த்தி சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் விவகாரம் தொடர்பாக மெய்த்தி மற்றும் பழங்குடியின குக்கி சமூகத்தினருக்கும் இடையே மோதல் வெடித்து கலவரமாக மாறியது. கடந்த மே மாதம் தொடங்கிய வன்முறையில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் வசித்து வருகின்றனர்.

we-r-hiring
பழங்குடி பெண்களுக்கு கொடூரம் இழைத்த 4 பேருக்கும் காவல் நீட்டிப்பு!
File Photo

மணிப்பூரில் கடந்த சில மாதங்களாக வன்முறை குறைந்திருந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜிரிபாம் மாவட்டத்தில் 3 குழந்தைகளின் தாய் கூட்டுபாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக்கொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து, நேற்று வயல் வெளியில் பணியில் இருந்த பெண் ஒருவர் ஆயுதக்கும்பலால் சுட்டுக்கொல்லப்படடார். இதனால் மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில், அசாம் எல்லையையொட்டி அமைந்துள்ள ஜிரிபாம் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தை குக்கி ஆயுதக்குழுவினர் இன்று தாக்குதல் நடத்தினர். இதனை தொடர்ந்து, அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு தீவைப்பில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சி.ஆர்.பி.எப் படையினர், தீவிரவாதிகளை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 11 பேர் கொல்லப்பட்டனர். இந்த மோதலில் சி.ஆர்.பி.எப் வீரர் ஒருவரும் காயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

MUST READ