spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியா"200 பேரின் உடல்களை அடையாளம் காண முடியவில்லை"- ஒடிஷா அரசு தகவல்!

“200 பேரின் உடல்களை அடையாளம் காண முடியவில்லை”- ஒடிஷா அரசு தகவல்!

-

- Advertisement -

 

"200 பேரின் உடல்களை அடையாளம் காண முடியவில்லை"- ஒடிஷா அரசு தகவல்!
File Photo

ஒடிஷா ரயில் விபத்து தொடர்பாக, அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ரயில் விபத்தில் மரணித்த சுமார் 200 பேரின் உடல்களை அடையாளம் காண முடியவில்லை. இறந்த 288 பேரில் கிட்டத்தட்ட 70 முதல் 80 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன. புவனேஸ்வர் எய்ம்ஸ் உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் உடல்கள் வைக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

ரயில் விபத்தில் காணாமல் போன மகன்…. தேடி அலைந்த பாசக்காரத் தந்தை!

ஒடிஷா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 5 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருபவர்களுக்கு 1 லட்சம் ரூபாயும் வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

தென்கிழக்கு ரயில்வே பிராந்தியத்தில் பயணிக்கும் 102 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல், 54 ரயில்கள் வேறு பகுதி வழியாகத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. ரயில் விபத்து காரணமாக, ஒடிஷாவில் தண்டவாள சீரமைப்புப் பணி நடப்பதால் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது.

இதனிடையே, ஒடிஷா மாநிலம், பத்ரக்கிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு இன்று (ஜூன் 04) பிற்பகல் 01.00 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படுகிறது.

மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்!

ரயில் விபத்தில் காயமடைந்த சுமார் 700- க்கும் மேற்பட்டோர் ஒடிஷா மாநிலத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் உயரிய சிகிச்சையை அளித்து வருகின்றனர்.

MUST READ