
2024 மக்களவைத் தேர்தலுக்கு தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழுவை அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இந்த குழுவிற்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான ப.சிதம்பரம் தலைமை வகிப்பார் என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் அறிவிப்பை கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ளார்.

‘ஃபைட் கிளப்’ பட வெற்றியை கேக் வெட்டி கொண்டாடும் படக்குழுவினர்!
சிங் தேவ், தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் அமைப்பாளராகச் செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த குழுவில் கர்நாடகா மாநில முதலமைச்சர் சித்தராமையா, கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஆனந்த் சர்மா, ஜெயராம் ரமேஷ், பிரவீன் சக்கரவர்த்தி, சசிதரூர் உள்ளிட்ட 14 பேர் இடம் பெற்றுள்ளனர்.
இன்றைய காதலர்களுக்கு பிடிக்கும் படம்…. ‘எல்ஐசி’ குறித்து எஸ் ஜே சூர்யாவின் பதிவு!
மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதமே உள்ள நிலையில், மாநிலங்களில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அகில இந்திய காங்கிரஸ் கட்சி ஏற்கனவே குழுவை அமைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
