வடமேற்கு வங்கத் தேர்தலில் விறுவிறுப்பான முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது வருகிறது.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், முர்ஷிதாபாத் பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் (TMC) தொண்டர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஆம் ஜனதா உன்னயன் கட்சி (AUJP) நிறுவனர் ஹுமாயூன் கபீர் அந்தப் பகுதிக்கு வருகை தந்தபோது, திரிணாமுல் தொண்டர்கள் அவருக்கு எதிராக முழக்கமிட்டதால் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
முர்ஷிதாபாத் மாவட்டத்தின் டொம்கல் (Domkal) பகுதியில், பல வாக்காளர்கள் வாக்களிக்கவிடாமல் தடுக்கப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து, இந்திய தேர்தல் ஆணையம் (ECI) வியாழக்கிழமை (ஏப்ரல் 23, 2026) அதிகாரிகளிடம் அறிக்கை கோரியுள்ளது. தங்களை தடுத்ததோடு மட்டுமல்லாமல், வாக்குச்சாவடிக்குச் சென்றால் தாக்கப்படுவோம் என்று சிலர் மிரட்டப்பட்டதாக டொம்கல் பகுதி வாக்காளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேற்கு வங்க தலைமை தேர்தல் அதிகாரியின் தகவல்படி, பிற்பகல் 1 மணி நிலவரப்படி 62.18% வாக்குகள் பதிவாகியுள்ளன.
16 மாவட்டங்களில் உள்ள 152 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கியது.
மொத்தம் உள்ள 3.60 கோடி வாக்காளர்களில் 18.76% பேர் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்திருந்தனர்.
சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு (SIR) பிறகு, மாநிலத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 12% குறைந்துள்ளது. தேர்தலை முன்னிட்டு முன்னெப்போதும் இல்லாத வகையில், சுமார் 2.5 லட்சம் வீரர்களைக் கொண்ட 2,450 கம்பெனி மத்திய துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
2026 மேற்கு வங்கத் தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 18.76% வாக்குகள் பதிவு
