Homeசெய்திகள்இந்தியாஅடுத்த 15 நாட்களுக்கு 5,000 கனஅடி வீதம் தண்ணீர் தர கர்நாடகாவுக்கு உத்தரவு!

அடுத்த 15 நாட்களுக்கு 5,000 கனஅடி வீதம் தண்ணீர் தர கர்நாடகாவுக்கு உத்தரவு!

-

 

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு!
File Photo

கர்நாடகா அரசு காவிரியில் இருந்து அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 5,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது. எனினும், தங்களிடம் போதிய தண்ணீர் இல்லாததால், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடகா அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

ஆந்திராவில் ஒற்றை யானை தாக்கி தம்பதி பலி

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 23வது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய பிற மாநிலங்களில் இருந்து உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அரசின் சார்பாக, தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் ஆர்.சுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கர்நாடகா தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து திறந்துவிட்டிருக்க வேண்டிய நீரில் அளவு குறித்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த இறுதி உத்தரவு, தற்போது வரை கர்நாடகா திறந்துவிட்டுள்ள குறைந்த அளவு தண்ணீர், போதிய நீரின்றி விவசாயிகள் சந்திக்கும் பிரச்சனைக் குறித்து தமிழக அரசு சார்பில் விரிவாகப் பேசப்பட்டது.

காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்க முடியாது என்றும், 47% அளவிற்கு பற்றாக்குறை நிலவுவதால், கர்நாடகத்தின் குடிநீருக்கு மட்டுமே தண்ணீர் இருப்பதாகவும் அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.

கர்நாடகத்தின் நான்கு முக்கிய அணிகளிலும் போதிய நீர் இல்லை. எனவே, தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறப்பது இயலாத காரியம் என கர்நாடகா அரசு கை விரித்தது. மழை பொழிவதற்கான வாய்ப்பு மிகக் குறைவாக இருக்கிறது. எந்த முன்னறிவிப்பும் இதுவரை வெளியிடப்படாமல் இருக்கின்றது. இந்த நேரத்தில் தமிழ்நாடு அரசுக்கு அவர்கள் கேட்கும் நீரைக் கொடுத்தால் பெரும் சிக்கல் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கூடியது மணிப்பூர் சட்டப்பேரவை!

அடுத்த 15 நாட்களுக்கு 5,000 கனஅடி தண்ணீர் வீதம் கர்நாடகா அரசு தமிழ்நாட்டில் காவிரியில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்ற காவிரி ஒழுங்காற்றுக் குழு அளித்த பரிந்துரையை உறுதிச் செய்த காவிரி மேலாண்மை ஆணையம், அதனை உத்தரவாகவும் பிறப்பித்தது.

MUST READ