Warning: Constant WP_DEBUG_DISPLAY already defined in /home/u483746846/domains/apcnewstamil.com/public_html/wp-config.php on line 100

Deprecated: Creation of dynamic property Free_Comments_For_Wordpress_Vuukle_Public::$settings is deprecated in /home/u483746846/domains/apcnewstamil.com/public_html/wp-content/plugins/free-comments-for-wordpress-vuukle/public/class-free-comments-for-wordpress-vuukle-public.php on line 142
மக்களவை தேர்தலுக்கான 6ம் கட்ட வாக்குப்பதிவு மும்முரம்!
Deprecated: Creation of dynamic property Free_Comments_For_Wordpress_Vuukle_Public::$app_id is deprecated in /home/u483746846/domains/apcnewstamil.com/public_html/wp-content/plugins/free-comments-for-wordpress-vuukle/public/class-free-comments-for-wordpress-vuukle-public.php on line 142
Homeசெய்திகள்இந்தியாமக்களவை தேர்தலுக்கான 6ம் கட்ட வாக்குப்பதிவு மும்முரம்!

மக்களவை தேர்தலுக்கான 6ம் கட்ட வாக்குப்பதிவு மும்முரம்!

-

- Advertisement -

மக்களவை தேர்தலுக்கான 6ம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

we-r-hiring

நாடு முழுவதும் மக்களவை பொதுத்தேர்தல் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ளே 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி கேரளா, கர்நாடகா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் வாக்குபதிவு நடைபெற்றது. மூன்றாம் கட்டமாக குஜராத், கர்நாடகா உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 07ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மக்களவை தேர்தலுக்கான 4ம் கட்ட வாக்குப்பதிவு கடந்த 13ம் தேதி ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ஒரே கட்டமாகவும், ஒடிசா, ஜார்கண்ட், மத்திய பிரதேசம், உள்ளிட்ட மாநிலங்களிலும் நடைபெற்றது. 5வது கட்ட வாக்குப்பதிவு கடந்த 20ம் தேதி 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த நிலையில், மக்களவை தேர்தலுக்கான 6ம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 6-ம் கட்ட வாக்குப்பதிவில் உத்தரப் பிரதேசத்தில் 14 மக்களவைத் தொகுதிகளுக்கும், ஹரியானாவில் 10 தொகுதிகளுக்கும், பீகாரில் 8 தொகுதிகளுக்கும், தில்லியில் 7 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகளுக்கும், ஒடிசாவில் 6 தொகுதிகளுக்கும், ஜார்க்கண்டில் 4 தொகுதிகளுக்கும், ஜம்மு காஷ்மீரில் ஒரு தொகுதி என மொத்தம் 58 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.

MUST READ