spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாகுடியரசு தலைவர் வருகையை முன்னிட்டு விமானப்படை ஹெலிகாப்டர் ஒத்திகை

குடியரசு தலைவர் வருகையை முன்னிட்டு விமானப்படை ஹெலிகாப்டர் ஒத்திகை

-

- Advertisement -

உதகையில் குடியரசு தலைவர் வருகையை முன்னிட்டு விமானப்படை ஹெலிகாப்டர்கள் ஒத்திகை.

we-r-hiring

நாளை மறுநாள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உதகைக்கு வர உள்ள நிலையில் 2 விமான படை ஹெலிகாப்டர்கள் தீட்டுக்கல் ஹெலிகேப்டர் தளத்தில் இறங்கி 3 முறை ஒத்திகையில் ஈடுபட்டன.

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் 28-ந்தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொள்கிறார். தனி விமானம் மூலம் கோவையில் உள்ள சூலூர் விமானப்படை தளத்திற்கு வரும் திரௌபதி முர்மு பின்னர் விமானப்படை ஹெலிகாப்டரில் உதகையில் உள்ள தீட்டுக்கல் பகுதிக்கு வந்து இறங்கி பின்னர் பின்னர் உதகையில் உள்ள ராஜ் பவனுக்கு செல்கிறார்.

குடியரசு தலைவர் வருகையை முன்னிட்டு உதகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில் இன்று காலை கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து இரண்டு ஹெலிகாப்டர்கள் உதகையில் உள்ள தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்தில் 3 முறை தரையிறங்கி ஒத்திகையில் ஈடுபட்டன. இதனிடையே இன்று முதல் தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளம் முழு ராணுவ மற்றும் காவல் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.

27-ந்தேதி காலை உதகை வரும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு 28 ஆம் தேதி வெலிங்டனில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் 29-ந்தேதி உதகை ராஜ்பவனில் பழங்குடியின மக்களை சந்தித்து அவர்களது கலை நிகழ்ச்சிகளை பார்வையிடுகிறார்.

பின்னர் 30 ஆம் தேதி காலை விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் கோவை செல்கிறார் பின்னர் அங்கிருந்து திருவாரூர் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

ஜாதகம் பார்ப்பது… சாமியாரிடம் செல்வது ஒரு வகையான போதை பழக்கம் – முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு

MUST READ