spot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாவிழாக்கோலம் பூண்டுள்ள அயோத்தி நகர்!

விழாக்கோலம் பூண்டுள்ள அயோத்தி நகர்!

-

- Advertisement -

 

விழாக்கோலம் பூண்டுள்ள அயோத்தி நகர்!

we-r-hiring

ராமர் கோயில் திறப்பையொட்டி, அயோத்தி நகரம் விழாக்கோலம் பூண்டு ஜொலிக்கிறது.

அயோத்தி ராமர் கோயில் இன்று திறப்பு – முக்கிய பிரமுகர்களுக்கு மகா பிரசாதம்!

ராமர் கோயில் குடமுழுக்கில் பங்கேற்க 10,000- க்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மடாதிபதிகள், அரசியல் தலைவர்கள், திரை மற்றும் விளையாட்டுத்துறை பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். அயோத்தியில் அமைக்கப்பட்டுள்ள கலை நயம் மிக்க அலங்கார வளைவுகள் காண்போரை ஈர்க்கின்றன.

‘வில் அம்பு வடிவங்கள், கண்கவர் ராமனின் திருவுருவப் படங்கள், பதாகைகளும் அயோத்தியை அலங்கரிக்கிறது. மலர்தோரணம், கலைநயம் மிக்க சிற்பங்கள், அலங்கார விளக்குகள் என அயோத்தி நகரம் மிளிர்கிறது.

ராமர் கோயில் திறப்பு நடைபெறவுள்ள நிலையில், அயோத்தியில் பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. எஸ்பிஜி, தீவிரவாத தடுப்புப்படை, சிறப்பு கமாண்டோ படை, மாநில போலீசார் உள்பட 30,000 பேர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கோயில் வளாகம். அயோத்தி உள்ளிட்ட இடங்களில் ட்ரோன், ஹெலிகாப்டர், விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

‘நாகரா பணியில் கட்டப்பட்ட அயோத்தி கோயில்!’

AI தொழில்நுட்பத்தில் இயங்கும் 10,000- க்கும் மேற்பட்ட கேமராக்கள் அயோத்தியில் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

MUST READ