Homeசெய்திகள்இந்தியா'நாகரா பணியில் கட்டப்பட்ட அயோத்தி கோயில்!'

‘நாகரா பணியில் கட்டப்பட்ட அயோத்தி கோயில்!’

-

- Advertisement -

 

'நாகரா பணியில் கட்டப்பட்ட அயோத்தி கோயில்!'

we-r-hiring

அயோத்தியில் ராமரின் கண்களில் மூடப்பட்டுள்ள துணியை அகற்றும் விழா இன்று (ஜன.22) பிற்பகல் நடைபெறுகிறது. பால ராமர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மஞ்சள் நிற துணி அகற்றப்படவுள்ளது.

மாஸ்கோ சென்ற பயணிகள் விமானம் விபத்து!

அயோத்தி ராமஜென்ம போமியில் ராமர் கோயில் நாகரா பாணியில் கட்டப்பட்டுள்ளது. ராமர் கோயிலின் ஒவ்வொரு தளமும் 20 அடி உயரமுள்ளது; மொத்தம் 392 தூண்கள், 44 வாயில்கள் உள்ளன. கருவறையில் உள்ள 51 அங்குல ராமர் சிலையை மைசூரு சிற்பி அருண் யோகிராஜ் வடிவமைத்துள்ளார்.

கிழக்கு மேற்கில் 380 அடி நீளம், 250 அடி அகலம், 161 அடி உயரம் கொண்டதாக கோயில் வளாகம் உள்ளது. பால ராமர் நின்ற கோலத்தில் இருக்கும் அந்த சிலை கோயில் கருவறையில் வைக்கப்பட்டுள்ளது. பழங்கால முறைப்படி ஆழமான அஸ்திவாரத்துடன் உலோக பயன்பாடு இல்லாமல் கோயில் கட்டப்பட்டுள்ளது. ராமர் கோயிலுக்கான கதவுகள், மணிகள் போன்றவை தமிழகத்தில் இருந்து சென்றிருக்கின்றன.

அயோத்தி ராமர் கோயில் இன்று திறப்பு – முக்கிய பிரமுகர்களுக்கு மகா பிரசாதம்!

தமிழகத்தில் ராமேஸ்வரம் போன்ற இடங்களில் இருந்து புனித மண், புனித நீர் அயோத்திக்கு கொண்டு செல்லப்பட்டது.

MUST READ