
ஆப்கானிஸ்தானில் இந்திய பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் பூர்ணிமா ரவி நடிக்கும் புதிய படம்…. விரைவில் வெளியாகும் பர்ஸ்ட் லுக்!
இந்தியாவில் இருந்து ரஷ்யா நாட்டின் தலைநகர் மாஸ்கோவிற்கு பயணிகளுடன் இந்திய விமானம் சென்றுக் கொண்டிருந்துள்ளது. அப்போது, தோப்கானே மலைப்பகுதியில் சென்ற போது, விமான விபத்து நேரிட்டது. ஆப்கானிஸ்தான் நாட்டின் பதக்ஷான் மாகாணம் வகான் பகுதியில் விமானம் விபத்து நேரிட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளனர்.
விமான விபத்தில் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டதா என்ற விவரம் வெளியாகவில்லை. இது குறித்து கிடைத்த தகவலின் பேரில், இந்திய அதிகாரிகள் தலிபான் அரசு அதிகாரிகளைத் தொடர்புக் கொண்டுள்ளதாகவும், விபத்துக்குள்ளான விமானத்தின் பெயர், பயணிகளின் விவரங்கள், எத்தனை உயிரிழந்துள்ளனர்? என்பது குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
‘தங்கலான்’ படத்துக்காக மாஸ்டர் பிளானுடன் களமிறங்கும் விக்ரம்…..தனஞ்ஜெயன் கொடுத்த அப்டேட்!
இந்திய பயணிகள் விமானம் விபத்து என்ற செய்தி, நாடு முழுவதும் உள்ள மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.