spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியா2027ல் முழு பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைப்போம் – மாயாவதி உறுதி

2027ல் முழு பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைப்போம் – மாயாவதி உறுதி

-

- Advertisement -

2027ல் உத்தரபிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ் மீண்டும் ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.2027ல் முழு பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைப்போம் – மாயாவதி உறுதி

பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்ஷி ராமின் நினைவு தினத்தை முன்னிட்டு லக்னோவில் உள்ள கன்ஷி ராம் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி உரையாற்றினார்.

we-r-hiring

அதில், உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள மற்ற அரசியல் கட்சிகளை போல் பணம் கொடுத்து தொண்டர்களை அழைத்து வரவில்லை என்றும் தினசரி உழைத்து சேமித்து வைத்த பணத்தில் தொண்டர்கள் திரண்டு இருப்பதாக தெரிவித்தார். இலட்சக்கணக்கான தொண்டர்கள் இன்றைய தினத்தில் கூடி இருப்பது 2027ம் ஆண்டில் மீண்டும் பகுஜன் சமாஜ் கட்சி உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் என்பதை உறுதி செய்வதாகவும், முழு பெரும்பான்மையுடன் பகுஜன் சமாஜ் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் என மாயாவதி தெரிவித்துள்ளார்.

அம்பேத்கர் எழுதிய இந்திய அரசியலமைப்பை மாற்றுவதற்கு பல கட்சிகளும் முயற்சித்து வருவதாகவும் ,ஆனால் அரசியலமைப்பை பாதுகாக்கும் ஒரே கட்சியாக பகுஜன் சமாஜ் நாட்டில் செயல்பட்டு வருவதாக மாயாவதி கூறினாா்.

2027ம் ஆண்டில் மீண்டும் பகுஜன் சமாஜ் ஆட்சியமைக்க வேண்டும் என்றால் பூத் மட்ட அளவில் சிறிய கூட்டங்களை கட்சியின் தொண்டர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். இப்போதிலிருந்து தேர்தலுக்கான பணிகளை தொடங்க வேண்டும்.  பகுஜன் சமாஜ் கட்சியின் வாக்குகள் பிற கூட்டணி கட்சிகளுக்கு செல்கிறது. ஆனால் கூட்டணி கட்சிகளின் வாக்குகள் பகுஜன் சமாஜுக்கு கிடைப்பதில்லை என ஆதங்கம் தெரிவித்தாா். மேலும், தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கக்கூடிய வகையில் தொண்டர்களும் தங்களது பணிகளை தொடங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

7 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றினால் மாவட்ட நீதிபதியாக நியமனம் – உச்சநீதி மன்றம் அதிரடி

MUST READ