புதுடெல்லியில், டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக்டோபர் 1-2025) நாணயம் மற்றும் சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளாா்.
பிரதமர் நரேந்திர மோடி, ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) 100வது ஆண்டு விழாவை முன்னிட்டு, சிறப்பு ரூ.100 நாணயம் மற்றும் நினைவு அஞ்சல் தலையையும் வெளியிட்டுள்ளாா். இதன் மூலம் இந்திய நாணய வரலாற்றில் முதன்முறையாக பாரத மாதாவின் உருவம் இடம்பெற்றுள்ளது.

இந்த நாணயத்தில், ஒரு பக்கம் தேசிய சின்னமான சிங்க முத்திரை இடம்பெற்றுள்ளது. மறு பக்கத்தில் ‘வரத முத்திரை’யுடன் அமர்ந்திருக்கும் பாரத மாதா, ஸ்வயம்சேவக் தொண்டர்கள் சல்யூட் செய்வது போன்றும் சித்தரிக்கப்பட்டுள்ளது.
ஆர்எஸ்எஸ்-இன் வழிகாட்டி தாரக மந்திரமான “ராஷ்ட்ராய ஸ்வாஹா, இதம் ராஷ்ட்ராய, இதம் ந மம” (நாட்டிற்காக தியாகம் செய்கிறேன், இது நாட்டிற்கானது, இது எனக்கானது அல்ல) என்ற வாசகமும் நாணயத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.
இந்த நாணயம் இந்திய நாணயவியலின் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. இந்திய நாணயத்தில் 1947-க்குப் பிறகு பாரத மாதா உருவம் இடம்பெறுவது இதுவே முதல்முறை.
புதுடெல்லியில், டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி தலைமை விருந்தினராக கலந்துகொண்டு, நாணயம் மற்றும் சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்டார்.
பிரதமர் மோடி பேசுகையில், இந்த நிகழ்வை நாட்டிற்கு பெருமை தரும், புனிதமான தருணமாகக் கருதி, நவராத்திரி மற்றும் விஜயதசமி நாளில் நடைபெறுவதை முக்கியத்துவம் வாய்ந்தது என வலியுறுத்தினார். அவர் குறிப்பிட்டதாவது, நாணயம் ஆர்எஸ்எஸ் தாரக மந்திரத்தைக் கொண்டிருப்பதோடு, நாட்டிற்கும் அதன் மக்கள் பண்பாடு மற்றும் வரலாற்று அடையாளத்திற்கும் பிரதிநிதித்துவம் அளிக்கிறது.
நாணயத்துடன், பிரதமர் மோடி ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டைக் கௌரவிக்கும் வகையில் சிறப்பு அஞ்சல் தலையையும் வெளியிட்டார். இதில் 1963ஆம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம்சேவக் தொண்டர்கள் அணிவகுத்துச் செல்லும் காட்சி இடம்பெற்றுள்ளது.
இந்த ரூ.100 நாணய வெளியீடு, பாரத மாதாவின் உருவம், தேசிய ஒருமைப்பாடு, தியாகம் மற்றும் வலிமையின் அடையாளமாகும். இந்த நாணய வெளியீடு, முக்கிய நிகழ்வாக இந்திய வரலாற்றில் பதியப் பெற்றுள்ளது என தெரிவித்துள்ளாா்.
மக்களுக்கு நல்லது செய்ய அரசியலுக்கு வரல…. அவரோட நோக்கமே இதுதான்….. விஜய் குறித்து பிரபல இயக்குனர்!