மணிப்பூர், அருணாச்சல பிரதேசம் மற்றும் லடாக்கில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனா்.மணிப்பூர் மாநிலம் சாந்தெல் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது . இது ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, திபெத்திலும் நேற்றிரவு 10.27 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. லடாக்கின் கார்கில் பகுதியில் இரவு 11.02 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கங்கள் இரவு 11.02 மணியளவில் ஏற்பட்டு இருப்பதாக தேசிய நில அதிர்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்ததாக தொிய வந்துள்ளது. இதனால் அங்கு வாழும் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனா்.
மேலும், இந்த நிலநடுக்கம், 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட 33.32 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 76.78 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்குமென முதலில் தீர்மானிக்கப்பட்டது. இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் சட்டக்கல்லூரிகளில் நூதன மோசடி…அறப்போர் இயக்கம் அதிரடி குற்றச்சாட்டு…
