நவி மும்பையில் கட்டப்பட்ட சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்துள்ளாா் பிரதமர் மோடி.
நாட்டின் முதல் டிஜிட்டல் விமான நிலையமாக உருவாகியுள்ள நவி முப்பபை சர்வதேச விமான நிலையம் Phase – 1 ஐ மோடி இன்று திறந்து வைத்தாா். இது நாட்டின் மிகப்பெரிய விமான நிலையமாக உருவெடுக்கும் இந்த சர்வதேச விமான நிலையத்தில் 4 கட்டங்களாக பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. . . இதில் இதில் ரூ.19 ஆயிரத்து 650 கோடி மதிப்பீட்டில் முதல்கட்ட பணி நிறைவு பெற்றுள்ளது. 1,160 ஹெக்டேர் பரப்பில் உருவாகியுள்ள இது முழுக்க டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது.

இது நாட்டின் விமான போக்குவரத்து திறனை மேலும் அதிகரிக்கும். இதன் மூலம் மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தின் கடுமையான போக்குவரத்து சுமை குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆண்டுக்கு 9 கோடி பயணிகளை இது கையாளும்.
லண்டனை தலைமையகமாக கொண்ட ஜஹா ஹதீத் கட்டிடக் கலைஞர்களால் இந்த முனையம் கட்டப்பட்டுள்ளது. இந்த விமான நிலையம் 47 மெகாவாட் சூரிய சக்தியை உருவாக்கும். மின்சார பஸ் சேவைகளையும் இயக்கும். இது வாட்டர் டாக்ஸி சேவை மூலம் இணைக்கப்பட்ட இந்தியாவின் முதல் விமான நிலையமாக மாற உள்ளது.
கிரிப்டோ கரன்சியில் அதிக லாபம்.. பல கோடியை சுருட்டிய மோசடி கும்பல்..!!