ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்தால் புதுச்சேரியில் வாகன விற்பனை, 35 சதவீதம் அதிகரித்துள்ளதாக வணிகவரித்துறை தகவல் தெரிவித்துள்ளது.புதுச்சேரி வணிக வரித்துறை ஆணையர் யாசின் சவுத்ரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்களின் விளைவாக புதுச்சேரி மாநிலத்தில் பொருளாதார நடவடிக்கைகள் அதிகரித்திருப்பதை காட்டுகிறது.
போக்குவரத்துத் துறையின் விவரங்களின் படி வாகனப் பதிவுகளின் அளவு 35 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் கார்களின் எண்ணிக்கை மட்டும் கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும்போது 37 சதவீதம் அதிகரித்துள்ளது.

பைக்குகளின் விற்பனை 35 சதவீதம், 3 சக்கர வாகனங்கள் – 38 சதவீதம், சரக்கு வாகனங்கள் 53 சதவீதம், பஸ்கள் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. இதேபோல், முக்கிய பல்பொருள் அங்காடிகளின் எப்.எம்.சி.ஜி., விற்பனை விவரங்களின் படி, மக்கள் பயன்படுத்தும் குறிப்பிட்ட வகை பொருட்களின் விற்பனை 15 சதவீதம் அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு : சட்டத்தை வளைக்கும் திமுகவின் முயற்சிக்கு சம்மட்டி அடி! – அன்புமணி..