spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாநீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

-

- Advertisement -

பீகார் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம். வாக்காளர்கள் ஏன் நீக்கப்பட்டனர் என்பது குறித்து ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதார்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் பிரஷாந்த் பூஷன் மற்றும் அபிஷேக் சிங்வி, இறுதி வாக்காளர் பட்டியலில் 3.66 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். ஆனால் எதற்காக நீக்கப்பட்டார்கள் என்பது குறித்து தேர்தல் ஆணையம் தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்பவில்லை. மேலும் சம்பந்தபட்ட வாக்காளர்களுக்கு இது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கபடவில்லை என்று குறிப்பிட்டனர்.

we-r-hiring

மேலும், ஒட்டுமொத்தமாக தற்போது 47 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.  இதனால் வாக்காளர் பட்டியல் வெளிப்படை தன்மையற்றதாகவும், பல்வேறு குழப்பங்கள் நிறைந்துள்ளதாக உள்ளது. முதலில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்கள் எத்தனை பேர் மீண்டும் சேர்க்கப்பட்டனர் என்பதையும் தேர்தல் ஆணையம் தெரிவிக்கவில்லை. 2003 தேர்தல் ஆணைய  விதிமுறைகளை தேர்தல் ஆணையமே மீறிவருகிறது என்று வாதிட்டனர்.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், வாக்காளர் பட்டியளில்  நீக்கப்பட்டவர்களின் முழுவிபரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும்.  தற்போதைய குழப்பங்களை நீக்க வேண்டும். நீக்கப்பட்ட 69 லட்சம் பேரில் மீண்டும் சேர்க்கப்பட்டோர் எத்தனை பேர், புதிய வாக்காளர்கள் எத்தனை பேர் என்பதையும் வெளிப்படுத்த வேண்டும். இதுவே, தேர்தல் நடவடிக்கை மீதான நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். தேர்தல் என்பது பொதுவான  ஜனநாயக நடவடிக்கை அதில் குழப்பம் எதுவும் இல்லை என்பதை தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்த வேண்டும் என்று குறிப்பிட்டனர்.

அப்பொழுது, தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர்தல் அறிவிக்கப்பட்டுவிடது. தேர்தல் பணிகளுக்குப் பணியாளர்கள் செல்ல வேண்டி உள்ளதால் மீண்டும் பட்டியல் விவகாரங்களை ஆராய நேரம் இல்லை. தற்போது புதிய உத்தரவுகள் பிறப்பித்தால் அது தேர்தலை பாதிக்கும் என்று வாதிட்டார்.

ஆனால் நீதிபதிகள் அதனை ஏற்காமல், வாக்காளர்கள் ஏன் நீக்கப்பட்டனர் என்பது குறித்து ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர்.

கரூர் சம்பவத்தால் மன கஷ்டத்தில் உள்ளோம் – இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி

MUST READ