Homeசெய்திகள்இந்தியாபிரதமர் மோடியை சந்தித்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பில்கேட்ஸ்

பிரதமர் மோடியை சந்தித்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பில்கேட்ஸ்

-

பிரதமர் மோடியை சந்தித்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பில்கேட்ஸ்

இந்தியா மீது முன்னெப்போதையும்விட தற்போது அதிக நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக பிரதமர் மோடியை சந்தித்த பிறகு, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியா மீது தற்போது அதிக நம்பிக்கை ஏற்பட்டுள்ளது – பில்கேட்ஸ்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பில்கேட்ஸ், பல்வேறு தலைவர்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில் அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது இருவரும், சுகாதாரம், காலநிலை மாற்றம், இந்தியாவின் ஜி20 தலைமை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

கொரோனாவை இந்தியா கையாண்டது குறித்து பில்கேட்ஸ் புகழாரம்

பின்னர் இதுகுறித்து இணையத்தில் பதிவிட்டுள்ள பில் கேட்ஸ், பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போது, இந்தியாவின் அசாத்தியமான முன்னேற்றம் பற்றியும், இந்தியாவின் கண்டுபிடிப்புகள் எவ்வாறு உலகிற்கு பயனளிக்கின்றன என்பது குறித்து பேசியதாக குறிப்பிட்டுள்ளார். அதே போல், கொரோனா பெருந்தொற்றை இந்தியா கையாண்டது குறித்தும் பில்கேட்ஸ் புகழந்துள்ளார்.

MUST READ